குழந்தையின் கொசுக்கடி தடிப்புகளை சரி செய்ய சிறந்த வழி..!
குழந்தையின் கொசுக்கடி தடிப்புகளை எப்படி சரி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். பொதுவா குழந்தைக்கு கொசு கடித்து (mosquito bites) விட்டால் உடனே தடித்து சிவந்து போய்விடும்.
இந்த தடிப்புகளை சரி செய்வதற்கு ஏராளமான கெமிக்கல் நிறைந்த ஆயில்மண்ட் உள்ளது. அவற்றை எல்லாம் குழந்தைக்கு பயன்படுத்தினால், பல உபாதைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்பதை காண்போம்.
குழந்தையை கொசு கடிக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்..!
ஐஸ் கட்டி:
Kosukadi treatment in tamil – குழந்தைக்கு கொசு கடித்து, தடித்து வீங்கி விட்டால், அப்போது ஒரு ஐஸ் கட்டியை எடுத்து கொள்ளவும், அவற்றை ஒரு காட்டன் துணியால் மடித்து கொசு கடித்த இடத்தில் வைத்து சிறிது நேரம் வரை ஒற்றி எடுத்தால் தடிப்பினால் ஏற்பட்ட எரிச்சல்கள் மற்றும் தடிப்புகள் சில நேரங்களில் சரியாகிவிடும்.
இந்த முறையை சிறிய குழந்தைகளுக்கு கூட செய்யலாம்.
வினிகர்:
Kosukadi treatment in tamil – குழந்தைகளுக்கு கொசு கடித்து வீங்கி விட்டால் அப்போது வீட்டில் இருக்கும் வினிகரை இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீர் கலந்து ஒரு காட்டன் பஞ்சியால் நனைத்து அந்த பஞ்சை வீக்கங்கள் உள்ள இடத்தில் வைத்து சிறு நேரம் வரை ஒற்றி எடுக்கவும்.
இவ்வாறு செய்தாலும் கொசு கடித்த வீக்கங்கள் சரியாகும்.
இந்த முறையை இரண்டு வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
தேன்:
Kosukadi treatment in tamil – குழந்தைக்கு கொசு கடித்து தடித்து விட்டால் அப்போது அந்த தடிப்பின் மீது தேன் வைத்து தடவினாலும் கொசு தடிப்புகள் (mosquito bites) சில நேரங்களில் மறைந்து விடும்.
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி (Dengue fever in…
டீத்தூள் பாக்கேட்:
இந்த முறையை அனைத்து குழந்தைகளுக்கும் செய்யலாம், உங்கள் வீட்டில் டீத்தூள் பாக்கெட் இருந்தால் அவற்றை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும்.
பின்பு அந்த பாக்கெட்டை கொசு கடித்த (mosquito bites) இடத்தில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் கொசு கடித்த தடிப்புகள் மறைந்து விடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |