குழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் பாதுகாக்க டிப்ஸ்..!

baby skin care

குழந்தையின் சருமத்தை பாதுகாக்க இயற்கை டிப்ஸ்..!

குறிப்பாக குழந்தையின் சருமத்தை (baby skin care) பாதுகாப்பதற்கு பல செயற்கை கிரீம் உள்ளது. இருப்பினும் குழந்தையின் தோலானது மிகவும் மென்மையானது. எனவே அவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் பலவகையான ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அரிப்பு, எரிச்சல் போன்ற பலவகையான பிரச்சனைகளை கூட ஏற்படுத்திவிடும்.

எனவே நம் வீட்டில் இயற்கையான முறைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி குழந்தையின் சருமத்தை (baby skin care) ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் எப்படி பாதுகாக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

டிப்ஸ் 1:

குழந்தையின் தோலை மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் பாதுக்காக்க பயத்தமாவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே குழந்தையின் சருமத்தை பாதுகாக்க, குழந்தையை குளிக்க வைக்கும் போது, சிறிதளவு பயத்தமாவு, சிறிதளவு பசும் பால் இரண்டையும் ஒன்றாக கலந்து, குழந்தையின் உடலில் தடவி நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வைத்தால், குழந்தையின் தோல் மற்றும் சருமம் இரண்டும் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் குறிப்பாக பொலிவுடனும் காணப்படும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

டிப்ஸ் 2:

உங்கள் குழந்தையின் தோல் நிறம் கருமையாக உள்ளதா? அப்படினா இதை try பண்ணுங்க.

அதாவது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.

பின்பு இந்த எண்ணெய்யை குழந்தையின் உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து ஓரு மணி நேரம் வரை வைத்திருந்து, பின்பு கடலை மாவு அல்லது பயத்தமாவு இரண்டில் ஏதேனும் ஒன்றை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தால், குழந்தையின் தோல் நிறம் வெண்மையாக மாறும்.

டிப்ஸ் 3:

குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், குழந்தை வெளியே செல்லும்போது ஏதேனும் ஒரு சன் வேஸ்லினை குழந்தையின் தோலிற்கு பயன்படுத்தினால், குழந்தையின் தோல் மற்றும் சருமத்தை பாதுகாக்கலாம்.

டிப்ஸ் 4:

குழந்தையின் பலவகையான தோல் பிரச்சனைக்கு, ஒரு சந்தனம் கட்டை இருந்தால் போதும். குழந்தையின் அனைத்து வகையான தோல் பிரச்சனைகளை சரி செய்து விட முடியும்.

இந்த சந்தன கட்டையை பால் அல்லது ரோஸ் வாட்டரை பயன்படுத்தி உரசி அவற்றை குழந்தையின் தோல் பகுதில் பயன்படுத்தினால் குழந்தையின் தோல் ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் மற்றும் எந்த ஒரு தோல் பிரச்சனைகளும் வராமல் பாதுகாக்க மிகவும் பயன்படுகிறது.

டிப்ஸ் 5:

குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு  பழங்களை கொடுத்து பழக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் ஆப்பிள், ஆரஞ்சு, பாதாம், திராட்சை போன்றவற்றை அதிகளவு கொடுத்து வர குழந்தையின் உடல் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

எனவே குழந்தைகளுக்கு தினமும் அதிகளவு பழங்களை கொடுத்து பழக்க வேண்டும்.

டிப்ஸ் 6:

குழந்தையின் சருமத்தை பாதுகாக்க தேங்காய் பால் மிகவும் பயன்படுகிறது. எனவே இந்த தேங்காய் பாலுடன் சிரிதளவு பயத்தமாவு, சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை ஒன்றாக கலந்து, குழந்தையின் சோப்புக்கு பதிலாக இந்த கலவையை பயன்படுத்தினால், குழந்தையின் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காணப்படும்.

டிப்ஸ் 7:

குழந்தைகளுக்கு குளியல் சோப்பாக மைல்ட் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். இல்லை எனில் குழந்தைகளுக்கு பயத்தமாவு அல்லது கடலை மாவை கூட பயன்படுத்தலாம்.

டிப்ஸ் 8:

குழந்தையின் சுயரூபத்தை பாதுகாப்பதற்காக தக்காளி, எலுமிச்சை மற்றும் தயிர் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

டிப்ஸ் 9:

குழந்தையை வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் குளிக்க வைத்தாலே போதும் குழந்தையின் சருமம் (baby skin care) பொலிவுடனும், வெண்மையாகவும் இருக்கும்.

டிப்ஸ் 10:

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் தங்கள் குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை பரிசோதனை செய்து கொண்டு, பின்பு இந்த முறைகளை பின்பற்றவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE