வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்..!

Updated On: February 3, 2026 5:13 PM
Follow Us:
Nutritious Foods To Growing Children in Tamil
---Advertisement---
Advertisement

Nutritious Foods To Growing Children in Tamil

பெற்றோர்கள் அனைவருமே குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு எந்த மாதிரி உணவுகளை கொடுக்க வேண்டும், அதுபோல எந்த உணவுகளை கொடுக்க கூடாது என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். அதுபோல நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் அனைத்தும் சத்தான உணவுகளாக இருக்க வேண்டும். சத்தான உணவுகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்று யோசிப்பீர்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

குழந்தைகளுக்கு பசியை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதை மட்டும் செய்யுங்கள்..!

Nutritious Foods in Children:

குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். அதுபோல குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நமக்கு எப்பொழுதும் ஒரு கண் இருக்க வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகளை நாம் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு எந்தவித நோய்த்தொற்றும் ஏற்படாது.

இரும்புசத்து நிறைந்த உணவுகள்: 

இரும்புசத்து நிறைந்த உணவுகள்

வளரும் நம் குழந்தைகளுக்கு இரும்புசத்து அதிகம் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். இதனால் இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்து கொள்ள உதவுகிறது.

பீன்ஸ் வகைகள், தானியங்கள், பச்சை காய்கறிகள், இரும்புசத்து நிறைந்த பழங்கள், சிவப்பு இறைச்சி, பருப்பு போன்ற இரும்புசத்து அதிகம் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.

வைட்டமின் C நிறைந்த உணவுகள்: 

வைட்டமின் C நிறைந்த உணவுகள்

குழந்தைகளுக்கு வைட்டமின் C நிறைந்த உணவுகளை கொடுப்பதால் நோய்த் தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும். விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அந்த நேரத்தில் அவர்களுக்கு சருமத்தில் ஏற்படும் காயத்தை சரி செய்வதற்கு வைட்டமின் C உதவுகிறது. அதனால் வளரும் உங்கள் குழந்தைகளுக்கு ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி போன்ற வைட்டமின் C நிறைந்த பழங்களை கொடுக்கலாம். அதுபோல தக்காளி, மிளகுத்தூள் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளையும் கொடுக்கலாம்.

உங்க குழந்தை சரியா சாப்பிடலையா? அதனால் ஒல்லியாக இருக்காங்களா! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள்: 

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

குழந்தைகளுக்கு புரதம் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதால் அவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகள் வளர்வதற்கு உதவியாக இருக்கின்றன.

அதனால் குழந்தைகளுக்கு மீன், கோழி, இறைச்சிகள், முட்டை, நட்ஸ், பால், தயிர், பன்னீர் சீஸ், சோயா பொருட்கள் மற்றும் பீனட் பட்டர் போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கொடுக்கலாம்.

ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகள்:  

ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகள்

குழந்தைகளுக்கு சரியான அளவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை கொடுக்கலாம். இது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளை கொடுப்பதால் குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்க உதவுகிறது.

இரத்தம் உறைதல் செல்களை விரைவாக குணப்படுத்துவதற்கும் வைட்டமின்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. ஆரோக்கியமான கொழுப்பு என்பது உளர் பழங்கள், எண்ணெய் ஆகியவற்றில் இருக்கிறது. அதனால் இது போன்றவற்றை உணவில் சேர்த்து கொடுங்கள்.

இவற்றுடன் குழந்தைகளுக்கு போதுமான அளவு தண்ணீரும் கொடுக்க வேண்டும். தண்ணீர் அதிகம் கொடுப்பதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுகின்றன.

அதனால் குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுத்து பழக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு உடல் வெப்ப நிலையை சீராக வைக்கவும், உடல் உறுப்புக்கள் சீராக இயங்குவதற்கும் உதவியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்=> குழந்தையின் சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்..! 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now