வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி | How to Confirm Pregnancy at Home in Tamil
How to Check Pregnancy in Tamil / வீட்டில் கர்ப்ப பரிசோதனை: புதிதாக திருமணம் ஆன பெண்கள் கருவுற்றிருக்கிறோமா என்று தெரியாமலேயே மனதில் குழப்பத்துடன் இருப்பார்கள். கர்ப்பமாக இருப்பதை நீங்கள் வீட்டிலே எளிமையாக பரிசோதனை செய்யலாம். வீட்டிலிருந்த படியே பரிசோதனை செய்யும் போது, வீண் செலவுகள் மற்றும் நேர விரயங்களைத் தவிர்க்கலாம். மேலும் கர்ப்பம் உறுதியானால் மட்டுமே நீங்கள் மருத்துவரை அணுகலாம், மேலும் உங்கள் கர்ப்ப விஷயத்தினை பற்றி பிறரிடமும் பகிரலாம். அதனால், எப்போதும் நீங்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியம். வீட்டிலே கர்ப்ப பரிசோதனை செய்ய விரும்புகின்றீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது..!
கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள் |
கர்ப்பத்திற்கான முதன்மை அறிகுறிகள்:
- மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது.
- வாந்தி மற்றும் குமட்டல்.
- அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
- இலகுவான மார்பகம்.
- மயக்கம்.
- வீக்கம்.
வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யும் போது கவனிக்க வேண்டியவை:
- வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி: வீட்டில் இருந்தே கர்ப்ப பரிசோதனையை உறுதி செய்து வெற்றி பெற, காலை தூங்கி எழுந்தவுடன் உங்களுக்கு வரும் முதல் சிறுநீரில் பரிசோதனை செய்ய வேண்டும். இது உங்களுக்குத் துல்லியமான தகவலை கொடுக்கும்.
- ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் கர்ப்ப பரிசோதனைக்கான கருவி ஏதேனும் பழுதடைந்திருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான சரியான தகவலைத் தராது.
- ஒரு முறைக்கு இரண்டு அல்லது மூன்று முறை, அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட நீங்கள் இந்த பரிசோதனையைச் செய்து உறுதிப் படுத்திக்கொள்ளலாம். சில சமயங்களில், இதில் எந்த வித மாற்றமும் ஏற்படலாம். அதனால் அவசரம் இல்லாமல் நிதானத்துடன் முடிவு எடுப்பது அவசியம்.
- மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் சரியான ஒரு வீட்டுப் பரிசோதனை முறையை நீங்கள் தேர்வு செய்யலாம். அப்படிச் செய்யும் போது உங்களுக்கு பெரும்பாலும் சரியான தகவலே கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- நீங்கள் கர்ப்ப பரிசோதனை செய்ய பயன்படுத்தும் கருவியை எப்படிச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கருவியில் இருக்கும் குறிப்பைப் படித்துத் தெரிந்து கொண்டு அதற்கு பின் உபயோகப்படுத்துவது நல்லது.
- உங்களது முதல் பரிசோதனை நெகட்டிவாக வந்து விட்டால், அதற்கு பின் ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கருவியில் டெஸ்ட் செய்து பார்க்கவும்.
- சோதனைப் பட்டை (டெஸ்ட் ஸ்ட்ரிப்) என்பது பிரபலமான வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள உதவும் கருவியாகும். இது எளிதாக அருகில் இருக்கும் மருந்து கடைகளில் கிடைக்கும்.
கர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..! |
வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை வைத்து சில கர்ப்ப பரிசோதனை முறைகள்:
ஷாம்பு:
கர்ப்ப பரிசோதனை எத்தனை நாட்களில் செய்ய வேண்டும்: காலை நீங்கள் தூங்கி எழுந்ததும் முதலில் வரும் சிறுநீரை சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். பின் சிறிது ஷாம்பூவை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கலக்கி வைத்துள்ள ஷாம்பூ கலவையில் சிறிது சிறுநீரைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் கவனிக்கவும். அதில் நொரை வந்தால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இது எப்படி சாத்தியம் என்றால், உங்கள் உடலில் இருக்கும் HCG ஹோர்மோன் ஷாம்புவுடன் கலக்கும் போது செயல்படத் தொடங்கும்.
சர்க்கரை:
how to check pregnancy at home in tamil: ஒரு சிறிய பவுலில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் சிறிது சிறுநீரைச் சேர்க்கவும். சர்க்கரை வேகமாக கரைந்தால், கர்ப்ப பரிசோதனை நெகடிவ் என்று அர்த்தம். ஆனால் இறுகி வேறு மாதிரி ஆனால், கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். இது ஏனென்றால், உங்கள் உடலில் இருக்கும் HCG ஹோர்மோன் சர்க்கரையை கரைய விடாது.
பற்பசை:
நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஏதாவது ஒரு பற்பசையில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதில் உங்கள் சிறுநீரைச் சேர்க்கவும். பற்பசையானது நீல நிறத்தில் மாறினால், நீங்கள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும் பற்பசை உங்களுக்கு எளிதாக நிற மாற்றத்தைக் கண்டறியப் பயன்படும்.
சோப்பு:
சிறுநீரை சிறிதளவு எடுத்துக் கொண்டு ஒரு சிறிய அளவு சோப்புடன் சிறுநீரை சேர்த்துக் கலக்கவும். கலந்த பிறகு அதில் நொரை அதிகம் ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் சோப்புடன் சேரும் போது அதிக நொரையை ஏற்படுத்துகின்றது.
வினிகர்:
ஒரு சிறிய கப்பில் வினிகர் எடுத்துக் கொண்டு அதனுடன் அரை கப் சிறுநீர் சேர்த்து 5 நிமிடம் வரை காத்திருக்கவும். இதில் நிறம் மாற்றம் அடைந்தால், நீங்கள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் வினிகருடன் சேரும் போது சில நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.
பேக்கிங் சோடா:
தனியாக ஒரு பவுலில் சிறிது சிறுநீரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 தேக்கரண்டி அளவிற்கு பேகிங் சோடா சேர்க்கவும். இதில் அதிகமாக நொரை வந்தால், நீங்கள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. HCG ஹோர்மோன் பேகிங் சோடாவுடன் சேரும்போது அதிக நொரையை உண்டாக்கும்.
இது போன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |