குறைமாத குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் – Preterm Baby Development in Tamil
நமது பொதுநலம்.காம் பதிவில் குழந்தையின் வளர்ச்சி நிலைகளை பற்றி பதிவு செய்து வருகின்றோம். ஏற்கனவே குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும் என்று பதிவு செய்துள்ளோம். அது நார்மல் குழந்தைக்கான பதிவாகும். ஆனால் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது, குறைமாத குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை பற்றியது.
குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பது என்பது உலகம் முழுக்க நடக்க கூடிய ஒரு மருத்துவ சிக்கலாக உள்ளது, அதனால் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மிகுந்த கவனிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரைப்படி அந்த குழந்தையை நாம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்நிலையில் நார்மல் குழந்தைக்கும், குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கும் குழந்தை வளர்ச்சி நிலை என்பது ஒன்றாக இருக்காது. நிறைய வேறுபாடுகள் இருக்கும். ஆக குறை மாதம் பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலையை எப்படி கண்டறியலாம் என்பது பற்றி இப்பொழுது நாம் அறியலாம் வாங்க.
குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் – Premature Baby Development in Tamil:
இந்த உலகில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு குறைமாத குழந்தைகள் இருக்கும், இந்த குறைமாத குழந்தையின் வளர்ச்சி நிலை என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.
குறைமாத குழந்தையின் வளர்ச்சி நிலையை எப்படி கணக்கிட வேண்டும் என்றால் நார்மலாக கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் 37 வாரத்தை தாண்டிவிட்டால் அந்த குழந்தையை நாம் நார்மல் குழந்தை அதாவது term baby என்று அழைக்கின்றோம்.
37 வாரம் பூர்த்தியடையாமல் 36 வாரம், 35 வாரம், 34 வாரம், 33 வாரம், 32 வாரம், 31 வாரம், 30 வாரம் ஆகிய வாரங்களில் ஏதாவது ஒரு வாரத்தில் குழந்தை பிறக்கிறது என்றால் அந்த குழந்தையை குறைமாத குழந்தை என்று அழைக்கின்றோம்.
இந்த குறைமாத குழந்தைகளிலும் நிறைய வகைகள் உள்ளது. Preterm Baby, Late Preterm Baby, Extremely Preterm Baby என்று நிறைய வகைகள் உள்ளன.
நிறைமாதம் குழந்தையின் வளர்ச்சி எந்த அளவிற்கு உருக்குமோ, அந்த அளவிற்கு குறைமாத குழந்தையின் வளர்ச்சி இருக்காது. அவர்கள் கொஞ்சம் மெச்சுரிட்டி ஆன பிறகு தான் நார்மல் term baby போல் வருவார்கள்.
உதாரணத்திற்கு 30 வாரம் அதாவது, 7½ மாதத்தில் ஒரு குழந்தை பிறக்குறது என்றால், இன்னும் 2½ மாதம் குழந்தை வயிற்றில் இருந்து வளரவேண்டியது, இருப்பினும் அந்த குழந்தை முன்கூட்டியே பிறந்துவிடுவதினால் அந்த குழந்தைக்கு மூன்று மாதம் அல்லது நான்கு மாதம் நார்மல் குழந்தைக்கு இருக்கும் வளர்ச்சி, இந்த குழந்தைக்கு இருக்காது.
குறைமாத குழந்தையின் வளர்ச்சி நிலை என்பது கொஞ்சம் குறைவாக தான் இருக்கும். இது போன்ற குறைமாத குழந்தை சரியாக வளர்ச்சியடைகிறார்களா என்று தெரிந்துகொள்வதற்கு, எளிமையான ஒரு விஷயம் எதுவென்றால், அந்த குழந்தை 40 வாரத்தை எட்டிய பிறகு தான், அதாவது 30 வாரத்தில் பிறந்த குழந்தை வெளியே வந்த பிறகு அதனுடைய மீதமுள்ள 10 வாரத்தை எட்டிய பிறகு தான், அந்த குழந்தையின் முதல் நாளாக கணக்கிடுகின்றன.
இதற்கு பெயர் Corrected Gestational Age என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆக ஒரு குழந்தை 7½ மாதத்தில் பிறந்தாலும் அந்த குழந்தை பிறந்து 3½ மாதம் ஆனாலும். அந்த 3½ மாதத்தில் 2½ மாதத்தை கழித்துவிட்டு பாக்கி இருக்கு ஒரு மாதத்தை மட்டும் தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். அப்படி என்றால் ஒரு மாதத்தில் ஒரு நார்மல் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்குமே அந்த வளர்ச்சி நிலை இந்த குழந்தைக்கு வந்தால் போதும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் வளர்ச்சி
40 வார கணக்கிடும் முறை உங்களுக்கு சரியாக விளங்கவில்லை என்றால், உங்களுடைய EDD அதாவது கர்ப்பமான பிறகு நீங்கள் எடுக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்டில் Estimated Date Of Delivery என்று சொல்லப்படும் EDD தேதி கொடுக்கப்படும். இந்த தேதி என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும், குழந்தை இந்த தேதியில் பிறக்கலாம் என்று தோராயமாக கணக்கிட்டு கூறப்படும் தேதி தான் இந்த EDD ஆகும். ஆக இந்த டெலிவரி தேதி சரியாக 40-வது வாரத்தில் தான் கணக்கிடுவார்கள்.
ஆக உங்கள் டெலிவரி தேதிக்கு பிறகு உங்களுக்கு குழந்தை எத்தனை நாட்கள் அல்லது மாதங்களை கடந்துள்ளது என்பதை பொறுத்து தான் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நிலையை உங்கள் குழந்தையிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியும்.
இது போன்று உங்கள் குழந்தை எத்தனை வாரம் கம்மியாக பிறந்துள்ளதோ அதற்கு தகுந்தது போல் குழந்தையின் வளர்ச்சி நிலையை நீங்கள் கணக்கிட வேண்டும். இது போன்று நீங்கள் எவ்வளவு நாட்கள் கணக்கிட வேண்டும் என்றால், அந்த குழந்தையின் இரண்டு வயது ஆகும் வரை கணக்கிட வேண்டும்.
அதன் பிறகு உங்கள் குழந்தை நார்மல் குழந்தைகள் எப்படி இருக்குமோ அது போன்று வளர்ச்சியடைய ஆரம்பித்துவிடும். இவ்வாறு கணக்கிட்டாலுமே சில குழந்தைகள் வேகமாக வளர்ச்சியடைந்துவிடுவார்கள், சில குழந்தைகள் மெதுவாகத்தான் வளர்ச்சியடைவார்கள். ஆக பொறுமையாக கையாள்வது தான் பெற்றோர்களின் கடுமையாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 மாத குழந்தை உணவு அட்டவணை
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |