குழந்தைகளுக்கான ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்..!

How to make boost powder at home in tamil

குழந்தைகளுக்கான ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்..! Ragi Powder for Babies Benefits in Tamil

கேழ்வரகு கூழ் பயன்கள் / How to make boost powder at home in tamil:- ராகியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ராகி மாவினால் செய்யப்படும் உணவுகள் மற்றும் பானங்களை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்துவர குழந்தைகள் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சரி இங்கு குழந்தைகளுக்கான ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர் எப்படி தயார் செய்யலாம், அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:-

  1. கேழ்வரகு – ஒரு கப்
  2. ஜவ்வரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்
  3. கசகசா – ஒரு டீஸ்பூன்
  4. பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 10
  5. ஏலக்காய் – 1
  6. பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  7. கொக்கோ பவுடர் – 2 ஸ்பூன்
  8. நாட்டுச்சக்கரை – 4 ஸ்பூன்
  9. உப்பு – ஒரு சிட்டிகை
ஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி? Homemade Horlicks For Kids

ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர் செய்முறை / கேழ்வரகு கூழ் பயன்கள்:-

How to make boost powder at home in tamil step: 1

ராகியை நன்றாக களைந்து கல், மண், தூசி அனைத்தையும் நீக்கி விடுங்கள்.

பின் ராகியை 10 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின்  கேழ்வரகு 10 மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள்.

பிறகு கைகளால் அந்த தண்ணீரிலே ராகியை களஞ்சி எடுக்க வேண்டும்.

How to make boost powder at home in tamil step: 2

அதன் பிறகு நிறம் இல்லாத, வெள்ளைத் துணி பையை எடுத்துக் கொள்ளுங்கள்.

துணி பையில், ராகியை கொட்டி அதை வீட்டின் சமையல் அறையில் எதாவது ஒரு பகுதியில் கட்டி விடுங்கள்.

இரண்டு நாட்களுக்கு காலையும் மாலையும் லேசாக தண்ணீரைத் தெளித்து விடுங்கள். மூன்றாவது நாள், காலையில் தண்ணீர் தெளிக்க கூடாது.

How to make boost powder at home in tamil step: 3

மூன்றாவது நாள், முளைக்கட்டியிருக்கும் கேழ்வரகை பையிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வெள்ளைத் துணியில் பரவலாக ராகியை உதிர்த்துக் கொள்ளுங்கள். பரவலாக பரப்பி அதைக் காய வைய்யுங்கள். ஈரமில்லாமல் நன்கு காய வேண்டும்.

இப்பொழுது முளைகட்டிய கேழ்வரகை ஒரு கப் அளவுக்கு எடுத்து கொள்ளவும்.

உங்கள் செல்ல குழந்தைகளுக்கான சத்தான 4 உணவுகள்..!

How to make boost powder at home in tamil step: 4

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எடுத்து வைத்துள்ள கேழ்வரகை சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.

இவ்வாறு கேழ்வரகை வறுத்த பின் ஒரு அகலமான தட்டில் ஒரு வெள்ளை துணியை விரித்து அவற்றில் கேழ்வரகை ஆறவிடவும்.

அதன் பிறகு அதே கடாயில் 10 முந்திரி பருப்பை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். இதே போல் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

How to make boost powder at home in tamil step: 5

அதன் பிறகு ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை அதே வாணலியில் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின் ஒரு டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசியை அதே கடாயில் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின் ஒரு டீஸ்பூன் கசகசாவை அதே வாணலியில் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

How to make boost powder at home in tamil step: 6

இவை அனைத்தையும் நன்றாக ஆறவைக்கவும். பின் மிக்சி ஜாரில் தேவையான அளவு நாட்டு சக்கரை போட்டு வைத்து கொள்ளவும். பின் அதிலேயே வறுத்து வைத்துள்ள அனைத்தையும் போடுங்கள்.

இதெல்லாம் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். பாதி அரைந்ததும் 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர், 2 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். அவ்வளவுதான் ஹோம்மேட் ராகி பூஸ்ட் தயார்.

11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..!

இதை அருந்தும் முறை:

கேழ்வரகு கூழ் பயன்கள் – how to make boost powder at home:- குழந்தைகளுக்கு ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் இந்த அரைத்த ராகி பூஸ்ட் பவுடரை கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு இந்த பானத்தை காலை மற்றும் மாலை நேரங்களில் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இந்த பானம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உதவும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Baby health tips in tamil