குறைப்பிரசவ குழந்தை பிறக்க முக்கியமான காரணங்கள்..!

premature baby

குழந்தை குறைப்பிரசவத்தில் (premature baby) பிறக்க என்ன காரணம்?

பிறக்கும் குழந்தை ஏன் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றது என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்துகொள்வோம். தற்போது உலகம் முழுவதும் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் (premature baby) பிறப்பதாகவும், மேலும் ஒரு மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தால் (premature baby) இறப்பதாகவும் ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க இவையே முக்கிய காரணம் ஆகும்..!

குறைமாத பிரசவம் என்பது முழுமையான கர்ப்ப காலத்திலிருந்து முன்கூட்டியே பிரசவிக்கும் பிரசவம் ஆகும்.

பொதுவாக பிரசவ காலம் என்பது 40 வாரங்கள். இதில் 40 வாரங்களுக்கு முன்னரே பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவக் குழந்தைகளாக (premature baby) கருதப்படுவர்.

37 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்கள் குறைமாத பிரசவங்கள் ஆகும்.மேலும், 33 வாரங்களுக்கு உட்பட்டு பிறக்கும் குழந்தைளுக்கு எடை குறைவு காரணமாக உள் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை

முதல் பிரசவத்தில்:

தலைப் பிரசவமே குறைப்பிரசவமாக இருந்தால் அடுத்ததாக பிறக்கும் குழந்தையும் (premature baby) குறைப்பிரசவமாக அமைய வாய்ப்பு உள்ளது.

கருவுற்ற பெண்கள்:

தாய்மை அடைந்த பெண் உண்ணும் உணவில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்குமாறும், கர்ப்பகால சர்க்கரை தாக்காதவாறும், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை உருவாகாதவாறும் பார்த்துக் கொண்டாலே போதுமானது.

குறைப்பிரசவத்திற்கு ஹார்மோன் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.

ஹார்மோனின் சமநிலையில் மாறுபாடு ஏற்படும் பொழுது குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் தவறாமல் தானியங்கள், முளைகட்டிய பயிறு வகைகள், உலர் பழங்கள், கேரட், பீட்ருட், கீரை, பால் சார்ந்த உணவுகள், மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் வாயிலாக பால் சுரப்பு நார்மலா இருக்கும்.

குறைப்பிரசவக் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு சில நேரங்களில் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும்.

பிறந்த குழந்தைகளுக்கு உரமருந்து கொடுப்பது எப்படி?

மேற்கண்டவைகளை உணவில் சேர்த்துவர பால் சுரப்பு நார்மலாக இருக்கும்.

குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு பெரும்பாலும் மூச்சுத் திணறல், இரத்த ஓட்டப் பாதிப்பு, மஞ்சள் காமாலை, தொற்றுநோய்களும் ஏற்பட அதிக அளவு வாய்ப்புள்ளது.

இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், சந்தோஷமான மனநிலை, நிம்மதியான தூக்கம், மனக்கவலை இன்றி இருத்தல் போன்றவற்றால் குழந்தைப் பிறப்பு எளிதாகும் எந்த பிரச்னைகளும் இல்லாமல் பிறக்கும்.

எனவே கர்ப்ப காலத்தில் கருவுற்ற பெண்கள் சரியான உணவு முறை, மன அமைதி, நிம்மதியான தூக்கம், மனக்கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களும், அவற்றிற்கான தடுப்பூசிகளும் !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

SHARE