கர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா? Sapota Benefits in Pregnancy

Sapota Benefits in Tamil

கர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா? Sapota Benefits in Pregnancy

Sapota Benefits in Tamil – பொதுவாக கர்ப்பிணி பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். அதாவது உண்ணும் உணவுகள், காய்கறிகள், பழங்கள் என எந்த உணவுகளை எடுத்துக்கொண்டாலும் அவையெல்லாம் தங்களின் உடலுக்கு ஒத்து கொள்ளுமா என்று சிந்தித்து உட்கொள்வது தங்களுக்கு, தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லதாகும். கர்ப்ப காலத்தில் உணவில் அதிகம் கவனம் செலுத்தி உட்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் இப்பதிவில் நாம் கர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா (pregnant lady sapotta sapidalama) என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Sapota Benefits in Tamil / கர்ப்பிணி பெண்கள் சப்போட்டா பழம் சாப்பிடலாமா?

சப்போட்டாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

sapota fruit

பொதுவாக சப்போட்டா நமக்கு எப்பொழுதும் சந்தைகளில் கிடைக்க கூடிய பழமாகும். இது மிகவும் சுவை நிறைந்த மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பழம் என்றும் சொல்லலாம். இவற்றில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சப்போட்டா பழம் அதிக நீர்ச்சத்தும் ஆற்றலும் நிறைந்த ஒன்று கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக சோர்வும் பலவீனமும் அடையும் தருணத்தில் சப்போட்டா போன்ற சத்துக்கள் மற்றும் ஆற்றல் அளிக்கும் பழ வகைகளை உட்கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா? Can Pregnant Lady Eat Sapota in Tamil

சப்போட்டா கர்ப்பிணி பெண்களின் உடலுக்கும், கருவின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தாராளமாக சாப்பிடலாம் இருப்பினும் அதிக அளவு சாப்பிட கூடாது. இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று உணவு முறைகளை மேற்கொள்வது மிகவும் நல்லதாகும்.

கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு சப்போட்டா பழங்களை சாப்பிடலாம்?

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு உணவு முறையை மேற்கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் உட்கொள்ள வேண்டும். கிடைக்கிறது என்று அளவுக்கு அதிகமாக உண்பது தவறு அப்படி உண்டால், அது கர்ப்பிணி பெண்களின் உடல்நலத்திற்கு தீமை அளிக்கும்.

எனவே கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 100 முதல் 120 கிராம் என்ற அளவில் சப்போட்டா பழங்களை உட்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.

சப்போட்டா நன்மைகள் –  Sapota Benefits in Tamil:-

கர்ப்பிணி பெண்கள் இந்த சப்போட்டா பழத்தினை உட்கொள்வதினால் உடனடி ஆற்றல் மற்றும் நீர்ச்சத்து போன்றவை எளிதில் கிடைக்கும். சப்போட்டாவினை அடிக்கடி உண்டு வருவது செரிமான கோளாறுகளை தவிர்க்கவும், நோய்த் தொற்றுகளிடம் இருந்து கர்ப்பிணி பெண்ணின் உடலை பாதுகாக்கவும் பெரிதும் உதவும்.

மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் பலவீனம், சோர்வு, குமட்டல், மயக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களின் உடல் எலும்புகளை பலப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்கி, அவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சரியான ஊட்டச்சத்து உணவுகளை உண்டு வருவதினால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வழிவகைசெய்யும்.

கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய டிப்ஸ்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips