புதினா இலைகளை குழந்தை தூங்கும் இடத்தில் போட்டால்..? குழந்தை பராமரிப்பு டிப்ஸ்..!

Advertisement

குழந்தை பராமரிப்பு குறிப்புகள்..!

குழந்தை பராமரிப்பு என்பது ஒரு மிகப்பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக வளரும் குழந்தைகளுக்கு (baby care tips in tamil) அடிக்கடி உடல் நல குறைவு பிரச்சனை ஏற்பட்டாலும், அதற்கான தீர்வுகளும் இருக்கும்.

எனவே பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதற்கான முதல் உதவிகள் தான் என்ன என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சரி இந்த பகுதியில் குழந்தை பராமரிப்பு குறிப்புகள் பற்றி இப்போது நாம் காண்போம்.

குழந்தை வளர்ப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !!!

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – குழந்தையின் மலச்சிக்கலுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு (baby care tips in tamil) அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும், இந்த பிரச்சனையை நினைத்து பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை.

இந்த பிரச்சனை பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவின் காரணமாகவும் அதன் ஜீரண வேகத்தினாலும் தான் இந்த மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு பசலைக்கீரை பெரிதும் உதவுகிறது. பசலைக்கீரையை பொடிப் பொடியாக நறுக்கி, அதனுடன் சிறிதளவு உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து நன்கு வேகவைத்து, குழந்தைகளுக்கு சாதத்தில் பிசைந்து கொடுத்தால், குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – தேங்காய் பால்:

குழந்தைகளுக்கு (baby care tips in tamil) தேவையற்ற நொறுக்கு தீனிகளை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, சுவையுள்ள தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

தங்கள் குழந்தைக்கு தேங்காய் பிடிக்கவில்லை எனில், தேங்காயில் பால் எடுத்து கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – வீட்டை சுத்தம் செய்தல்:

சிறிய குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்டு வீட்டை பெருக்குவதோ, சுத்தம் செய்தாலோ அவற்றில் ஏற்படும் தூசிகளினால் கூட குழந்தைகளுக்கு இருமல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்டு சுத்தம் செய்யும் பழக்கத்தை தவிர்த்து கொள்ளவும்.

குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ???

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பினாயில் அல்லது டெட்டாயில்:

பொதுவாக வீட்டில் கை குழந்தைகள் (baby care tips in tamil) இருந்தால் அது நிச்சயம் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வாந்தி எடுப்பது என்று செய்துகொண்டு தான் இருக்கும்.

எனவே ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் பினாயில் அல்லது டெட்டாயில் ஊற்றி வைத்து கொள்ளவும். தேவைப்படும்போது இந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தெளித்து சுத்தமான துணியை கொண்டு துடைக்கவும்.

இவ்வாறு செய்வதினால் குழந்தைகளுக்கு எந்த ஒரு கிருமித் தொற்றுகளும் அண்டாமல் குழந்தையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.

கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக கொடுக்க வேண்டும்:

பொதுவாக குழந்தைகளுக்கு (baby care tips in tamil) எலும்பு மற்றும் பற்கள் வளரும் பருவம் என்பதால் இயல்பாகவே கால்சியம் அதிகமாகத் தேவைப்படும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

சாஃப்ட் ட்ரிங்க்ஸ் குழந்தைகள் விரும்பி குடிக்கிறார்கள் என்பதற்காக வாங்கிக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் இதில் உள்ள பாஸ்பேட் சத்தானது உடலில் கால்சியம் சத்தை கிரகிக்கும் ஆற்றலையும் திறனையும் குறைக்கிறது.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – வசம்பு:

குழந்தை பராமரிப்பு முறையில் வசம்பு முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்த வசம்பை குழந்தை படுக்கும் இடத்தில் குழந்தையின் தலைமாட்டில் வைத்தால் எறும்பு, கொசு போன்ற பூச்சிகள் தொந்தரவுகள் இருக்காது.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பால்:

வளரும் குழந்தைகளுக்கு பாலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வந்தால், குழந்தையின் வளர்ச்சி மிக சீராக இருக்கும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – ஈ தொல்லைக்கு:

கைக்குழந்தைகளை பகலில் தூங்கவைக்கும் பொது அதிகமாக ஈ தொல்லைகள் இருக்கும். அப்போது குழந்தையை சுற்றி புதினா இலைகளை கசக்கி போட்டு வைத்தால், ஈக்கல் அந்த பக்கம் செல்லாது.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பேரிச்சை பழம்:

குழந்தைகளுக்கு தினமும் 4 அல்லது 5 பேரிச்சை பழத்துடன் ஒரு கிளாஸ் பால் அல்லது தண்ணீர் கொடுத்து வந்தால், குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு நகம் வெட்டும் போது:

குழந்தை பராமரிப்பு முறையில் குழந்தைகளுக்கு (baby care tips in tamil) நகம் வெட்டும் போது குழந்தைகளின் கைகளை ஒரு முறை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். அதன்பிறகு குழந்தைகளுக்கு நகம் வெட்ட வேண்டும்.

அப்போது தான் எளிதாக நகத்தை வெட்டி எடுக்க முடியும். குழந்தைகளுக்கும் வலிக்காமல் இருக்கும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி – முழுமையான விவரங்கள்

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – காது வலி:

குழந்தைகள் (baby care tips in tamil) அழும்போது காதின் பக்கமாக கையைக் கொண்டு போய் வைத்து அழுகிறதென்றால், அது காது வலியாக இருக்கக் கூடும்.

ஏனெனில் குழந்தைகளை குளிப்பாட்டும் போது தண்ணீர், சோப்பு நுரை ஆகியவை உள்ளே செல்ல வாய்ப்புண்டு. அதனால் காது வலி உண்டாகலாம்.

அதை புரிந்து கொண்டு காதுக்கு ட்ராப்ஸ் விடுங்கள். காதுக்குள் சீழ் பிடித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சியையும் பாதிக்கும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – தொண்டை புண்:

நிறைய குழந்தைகளுக்கு (baby care tips in tamil) அடிக்கடி தொண்டை வலி ஏற்படுவதுண்டு. அதற்கு மிக முக்கிய காரணம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் தான்.

வீட்டில் நாய், பூனை, பறவைகள் ஏதேனும் வளர்ப்பதால் தெண்டைப்புண் தொற்று குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புண்டு என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதனால் வளர்ப்பு பிராணிகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள்.

தடுப்பூசி:

குழந்தைகளுக்கு (baby care tips in tamil) அடிக்கடி வருகிற பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் மருத்துவ ஆலோசனைப் படி மருந்துகள் வைத்திருப்பது நல்லது.

குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கும் அதேபோல் போட வேண்டிய தடுப்பூசி சரியான நேரங்களில் போடுதல் அவசியம்.

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement