குழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா ? பகுதி -2

குழந்தையின் நாக்கு மற்றும் வாயை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

குழந்தை பராமரிப்பு முறை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்தவகையில் குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்புகளையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஆனால் அனைத்து உறுப்புகளையும் சாதாரணமாக சுத்தம் செய்ய முடியாது. குழந்தையின் சில உறுப்புகளை சுத்தம் செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் குழந்தையின் நகங்கள் (Baby Nail Cutting) மற்றும் குழந்தையின் வாயை (baby mouth cleaning) எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் காண்போம்.

குழந்தை நகங்களை சுத்தம் (Baby Nail Cutting) செய்வது எப்படி..?

குழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா… நிச்சயம்… நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.

குழந்தையின் நகத்தை பராமரிக்க டிப்ஸ் (Baby Nail Cutting):

குழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம் (Baby Nail Cutting) .

குழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம், சுத்தம் (Baby Nail Cutting) செய்யலாம்.

நகத்தை வெட்டுகிறேன் என்று குழந்தையின் சதைப் பகுதியை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு நகத்தை (Baby Nail Cutting) வெட்டுவது சரி.

நகம் வெட்டினால் (Baby Nail Cutting) அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடையின் நூலில் குழந்தையின் சின்ன சிறு விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள்.

சில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அவர்களுக்கு நகம் கட் செய்யும் போது, உதவிக்கு ஒரு நபரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப, இன்னொருவர் குழந்தையின் நகங்களை சுத்தம் (Baby Nail Cutting) செய்யலாம்.

நகம் கட் (Baby Nail Cutting) செய்யும்போது, தவறுதலாக, தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ ரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அதை அப்படியே அழுத்திப் பிடியுங்கள். மிதமாக அழுத்திப் பிடிக்கவும்.

சில அம்மாக்கள் குழந்தையின் நகங்களை தன் (Baby Nail Cutting) வாயால் கட் செய்வார்கள். இது தவறு. அப்படி செய்ய கூடாது. இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் கிருமி பாதிப்புகள் வரும்.

குழந்தை வளர்ப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !!!

குழந்தையின் வாயை சுத்தம் (Baby Mouth Cleaning) செய்வது எப்படி?

ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள்.

பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும்.

குழந்தையின் வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும்.

0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.

1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம்.

பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.

குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை.

பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும்.

ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

குழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா ? பகுதி – 1

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.