வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த சம்மரில் குழந்தைகளுக்கான ஹெல்த்தி ட்ரின்க்

Updated On: April 29, 2026 4:48 PM
Follow Us:
summer healthy drinks for kids in tamil
---Advertisement---
Advertisement

Summer Healthy Drinks For Kids

இந்த சம்மர் காலம் வந்தாலே வீட்டிற்குள்ளையும் இருக்க முடியாது, வெளியிலும் போக முடியாது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இதனை சமாளிப்பது பெரும் பாடாக இருக்கும். மேலும் உடலில் பல அலர்ஜி பிரச்சனை ஏற்படும். அம்மை போன்ற பிரச்சனை ஏற்படும். அதனால் நம்மை சம்மர் காலத்தில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அது போல நம் வீட்டில் உள்ள குழந்தைகளையும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் குழந்தைகளுக்கான சம்மர்நேரத்தில் கொடுக்க கூடிய ஹெல்த்தி டிரிங்கை பற்றி காண்போம்.

Watermelon Lemonade:

Summer healthy drinks for kids in tamil for school

தர்பூசணி மற்றும் எலுமிச்சை பழமானது கோடை காலத்திற்கு சிறந்த பானமாக இருக்கிறது. இந்த தர்பூசணியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. இந்த இரண்டு பழங்களிலும் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது. புற்றுநோய் பிரச்சனையை தடுப்பதற்கும் உதவுகிறது.

எலுமிச்சை சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதில் தர்பூசணி துண்டுகளை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதனை எலுமிச்சை சாற்றில் கலந்து கொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் வளர்ச்சி

Cucumber Mint Lemonade:

Summer healthy drinks for kids in tamil for school

வெள்ளரிக்காய் மற்றும் புதினா நமது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இவை பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் வயிற்றை குறைப்பதற்கும், செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நமது செல்களை சேதப்படுத்தும் பிரீ ரேடிக்கல்லிருந்து பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

சருமத்தை ஆரோக்யமாகவும், நீரேற்றமாகவும் வைத்து கொள்வதற்கு உதவுகிறது.எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆனது சருமத்தை இளமையாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

வெள்ளரிக்காயை கட் செய்து மிக்சியில் சேர்த்து அரைத்து சாற்றை மட்டும் வடிக்கட்டி கொள்ள வேண்டும். பின் அதில்  புதினா இலைகள் மற்றும் சீனி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

Orange Juice:

Summer healthy drinks for kids in tamil indian

ஆரஞ்சு பழமானது நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இவை உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. ஆரஞ்சு பழத்தை உறித்து அதன் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் சிறிதளவு சீனி சேர்த்து கலந்து கொள்ளவும்.

மேலே கூறப்பட்டுள்ள ஜூஸ் வகைகளை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வாருங்கள், மேல் கூறியுள்ள மூன்றும் கொடுக்க முடியவில்லை என்றாலும் ஏதாவது ஒன்றை மட்டும் தொடர்ந்து கொடுத்து வாருங்கள்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை