குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது???

Advertisement

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு..!

குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை எப்படி தெரிந்து கொள்வது???

நீரிழிவு நோய் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சர்க்கரை நோயால், பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதிலும் குறிப்பாக சமீபகாலமாக குழந்தைகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க..!

 

சரி குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

குழந்தைக்கு நீரிழிவு நோய் அறிகுறிகள் (Symptoms of diabetes in children):

பொதுவாக சர்க்கரை நோயில் இரண்டாவது வகை பெரியவர்களுக்கு மட்டும் தான் உள்ளது என முன்பு கருதப்பட்டது. ஆனால் இப்போது மாறி வருகின்ற பழக்க வழக்கங்களினால் குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.

இருப்பினும் சில அறிகுறிகளை வைத்து குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தைக்கு பின்வரும் அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் கவனித்தால், அவர்களை உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

குழந்தைக்கு நீரிழிவு நோய் அறிகுறிகள் – அதிக தாகம்:

தங்கள் குழந்தைக்கு நீரிழிவு நோய் (symptoms of diabetes in children) இருந்தால், அவர்கள் இடைவிடாத தாகத்தை உணரலாம்.

இதற்கு காரணம் அது இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் திசுக்களில் இருந்து நீரினை உறிஞ்சுவது ஆகும். உங்கள் குழந்தைகள் இனிப்பு பானங்களுக்காக அதிக ஏங்குவார்கள்.

குழந்தைக்கு சர்க்கரை நோய் அறிகுறிகள் – அடிக்கடி சிறுநீர் கழிப்பது:

 

அதிக தாகத்தின் காரணமாக குழந்தை அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் காரணமாக குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதாக இருக்கும்.

உங்கள் குழந்தை அசாதாரணமான எண்ணிக்கையில் கழிவறைக்குச் செல்வதன் இடைவேளை எடுத்துக் கொள்வதை கவனித்தால் அது அதிக சர்க்கரை அளவின் அடையாளமாக இருக்கலாம். அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.

குழந்தைக்கு சர்க்கரை நோய் அறிகுறிகள் உடல் எடை குறைதல்:

குழந்தைக்கு சர்க்கரை நோய் (symptoms of diabetes in children) உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால் வகை 1 நீரிழிவு நோயில், உடல் இன்சுலின் உற்பத்தி நிறுத்தம் காரணமாக உங்கள் உடல் சர்க்கரையைப் பயன்படுத்தி உங்களுக்கான ஆற்றலை உருவாக்க முடியாது, எனவே, தசை மற்றும் கொழுப்பு இழப்பு ஏற்படலாம்.

இதனால் உங்கள் குழந்தை திடீரென, விரைவான அதே சமயம் வேகமான எடை இழப்பு ஏற்படும். இது அவர்களுக்கு நீரழிவு நோய் உள்ளதற்கான அறிகுறியாகும்.

ஆண் குழந்தை பெற்றெடுத்தால் தாயின் ஆயுள் குறையுமா..!

குழந்தைக்கு நீரிழிவு நோய் அறிகுறிகள் ஆற்றல் குறையும் :

உங்கள் குழந்தை எப்போதும் சோர்வாகவோ அல்லது மந்தமாகவோ இருக்கின்றதா? ஆம் என்றால் உங்கள் குழந்தையின் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையினை அவரது தசைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்ற முடியாமல் போவதே ஆகும்.

இது அவர்களுக்கு நீரழிவு நோய் உள்ளதற்கான மற்றுமொரு அறிகுறி என்றுகூட சொல்லலாம்.

குழந்தைக்கு நீரிழிவு நோய் அறிகுறிகள் அதிகப்படியான பசி ஏற்படும் :

குழந்தைக்கு குறைந்த இன்சுலின் அளவு காரணமாக அவர்கள் அதிக ஆற்றல் இழக்கிறார்கள். இதன் காரணமாக உங்கள் குழந்தைக்கு கடுமையான பசியை உணர்வார்கள், இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகையாக இருப்பதற்கான பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

உடலானது சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதற்கான இன்சுலினை உற்பத்தி செய்யத பொழுது உடம்பிலுள்ள சர்கரையினை பெருங்குடலில் உள்ள அமிலங்கள் கரைகின்றன.

இது அவசர நிலையினை உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தலாம் நீரழிவு நோய் (symptoms of diabetes in children) உள்ள எந்த குழந்தைக்கும் இந்நிலை ஏற்படலாம்.

குழந்தைக்கு நீரிழிவு நோய் அறிகுறிகள் – ஈஸ்ட் தொற்று:

டைப் 1 நீரிழிவு உள்ள பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட் தொற்றுகள் அடிக்கடி வரும் அபாயம் உள்ளது. ஈஸ்ட் தொற்று அல்லது தவழும் குழந்தை ஒரு மோசமாக டயபர் தடிப்பு காட்டலாம்.

இந்த அறிகுறிகளை வைத்து உங்கள் குழந்தைக்கு நீரிழிவு நோய் (symptoms of diabetes in children) இருந்தால் கண்டறிய பாருங்கள்.

பெற்றோர்கள் குளந்தையன் ஆரோக்கியம் விஷயங்களில் மிகவும் கவனாக இருக்க வேண்டும். மேலும் தங்களது குழந்தைகளுக்கு மேல் கூறியுள்ள அறிகுறிகளை கண்டறிந்து தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்வதினால். உங்கள் குழந்தையின் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..!

 

இதுபோன்ற குழந்தை நலன் பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
Advertisement