தாலாட்டு பாடல் வரிகள்
நம் முன்னோர்கள் காலத்தில் குழந்தைகளை தூங்க வைப்பதற்கு கஷ்டமே பட மாட்டார்கள். ஏனென்றால் தொட்டியில் குழந்தையை போட்டு தாலாட்டு பாடல் பாடுவார்கள் இதனால் குழந்தை அழகாக தூங்கி விடும். ஆனால் இந்த காலத்தில் உள்ள பெற்றோர்கள் குழந்தையை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள். சினிமா பாடல்களை மொபைலில் போட்டு விட்டு தொட்டியை ஆட்டினால் எப்படி பிள்ளைகள் தூங்கும். பாவம் அவர்களுக்கு தாலாட்டு பாடல் தெரியவில்லை. அம்மாவின் தாலாட்டு பாடலை கேட்டாலே குழந்தைகள் அழகா தூங்கி விடும். அதனால் இந்த பதிவில் தாலாட்டு பாடலை பற்றி தெரிந்து கொண்டு இதன் மூலம் உங்களின் குழந்தைகளை தூங்க வையுங்க..
ஆராரோ ஆரிராரோ:
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூச் செண்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
பச்சை இலுப்பை வெட்டி:
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே
கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு
கண்ணே நீ சித்திரப் பூந் தொட்டிலிலே
குழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் !!!
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்!
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!:
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
கனியமுதே நீ உறங்கு:
ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ
முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ
முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ
கண்ணே கண்ணுறங்கு கனியமுதே நீ உறங்கு
தாய்மாமன் பற்றிய தாலாட்டு பாடல்:
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும் கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !
பிறந்த குழந்தை நன்றாக தூங்க வைப்பது எப்படி..?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |