குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இதை சொல்லிக்கொடுங்கள்

Advertisement

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் கற்று கொள்ள வேண்டியவை

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் அறிந்திருக்க வேண்டியவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். அம்மாக்கள் அனைவரும் குழந்தைகள் கருவில் இருக்கும் போதே குழந்தைகளிடம் பேச ஆரம்பித்துவிடுவார்கள். சில குழந்தைகள் பிறந்ததிலிருந்தே புத்தி கூர்மையுடன் காணப்படும். சில குழந்தைகள் வளர வளர கூர்மையுடன் இருப்பார்கள். குழந்தைகள் கருவில் இருக்கும் போதே அவர்களிடம் பேச ஆரம்பியுங்கள். குழந்தை பிறந்ததுக்கும் பிறகும் பள்ளி சேர்க்கும் முன் அவர்களுக்கு அடிப்படை விஷயங்களை கற்று கொடுங்கள். வாங்க என்னென்ன என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

குழந்தையை தூங்க வைப்பது எப்படி என்று தெரியவில்லையா.!இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் ⇒ குழந்தையை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த மாதிரி பண்ணுங்க

அடிப்படை தமிழ் எழுத்துக்கள்:

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் அடிப்படை எழுத்துக்களான உயிர் எழுத்து, மெய் எழுத்து, ஆங்கிலத்தில் வரும் A முதல் Z வரை கற்று கொடுக்க வேண்டும். இந்த அடிப்படை விஷயங்கள் தெரிந்துகொண்டால் அவர்கள் பள்ளியில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு எளிமையாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் கல்வியில் ஆர்வமாகவும் இருப்பார்கள்.

பெயரை எழுத கற்று கொடுப்பது: 

உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் அவர்களது பெயரை எழுத கற்று கொடுக்க வேண்டும். அவர்கள் எழுதுவதன் மூலமாக எழுத்து அழகாக இருக்கும் அதனோடு கல்வியின் மீது ஆர்வம் அதிகரிக்கும். அதனால் பெயரை எழுத கற்று கொடுங்கள்.

வடிவங்கள் பெயர்கள்:

உங்கள் குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிப்பதோடு வடிவங்களையும் கற்று கொடுக்க வேண்டும். வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் மற்றும் பல வடிவங்கள் உள்ளது. அதனை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்.

சாப்பிடுவது எப்படி.?

உங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் வரை நீங்களே உணவு ஊட்டி விடுவீர்கள். அதுவே குழந்தை பள்ளி சென்றால் எப்படி உணவை உண்ணும். அதனால் குழந்தைகளை பள்ளி சேர்க்கும் முன் உணவு எப்படி சாப்பிடுவது, சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவி விட்டு தான் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

ஆடை அணிய:

உங்கள் குழந்தைளுக்கு ஆடை அவர்களாகவே அணிய கற்று கொடுக்க வேண்டும். மற்றவர்கள் உதவி இல்லாமல் ஆடை அணிய தெரிந்திருக்க வேண்டும்.

கழிவறை இருக்கை:

வீட்டில் இருக்கும் போதே குழந்தைகளுக்கு கழிவறையில் கழிவுகளை கழிப்பதற்கு சொல்லி கொடுக்க வேண்டும். அப்போது தான் பள்ளியில் அவர்கள் முறையாக கழிவுகளை கழிப்பார்கள்.

தேவைகளை பூர்த்தி செய்ய:

உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே கேட்க வேண்டும். நீங்களே அவர்களது தேவையை அறிந்து பூர்த்தி செய்ய கூடாது. அதனால் அவர்களின் தேவையை கேட்க கற்று கொடுக்க வேண்டும்.

நட்பு பராமரிப்பது எப்படி.?

உங்கள் குழந்தைகளுக்கு மற்றவருடன் எப்படி பழக வேண்டும் என்பதை கற்று கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் போதே மற்ற குழந்தைகளுடன் பழக விடுங்கள். அப்போது தான் பள்ளிக்கு சென்ற பின் அவர்கள் மற்ற குழந்தைகளுடன் ஈஸியா பழகுவார்கள்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil
Advertisement