வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தை நலன் – தொப்புள் கொடி பற்றிய நம்பமுடியாத தகவல்கள்..!

Updated On: August 2, 2023 12:20 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

தொப்புள் கொடி பற்றிய நம்பமுடியாத தகவல்கள்..!

உங்கள் கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருக்க உணவு, உடற்பயிற்சி சுவாசப் பயிற்சி மட்டும் காரணமல்ல. கருவில் வளரும் குழந்தைக்கு அருகிலேயே இருக்கும், குழந்தையை உயிருடன் வைத்திருக்கும் தொப்புள் கொடி காரணம்.

இதையும் படியுங்கள்–>  இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!!

குழந்தை நலன்  – தொப்புள் கொடியைப் பற்றி நமக்குதெரியாத தகவல்கள் இதோ…

குழந்தை உருவானதை போலவே கருமுட்டையில் இருந்து தான் உருவாகும் விந்தணுவும் கருமுட்டையும் இணையும் போது, அவை குழந்தையை மட்டும் உருவாக்குவதில்லை. அதனுடன் சேர்ந்து தொப்புள் கொடியையும் உருவாக்குகின்றன. கருமுட்டை தானாகவே கருப்பை சுவற்றில் பதித்துக் கொள்ளும்.

உட்புற அணுக்கள் வளர்ச்சி அடைந்து சிசுவாக மாறுகிறது. அதேப்போல் வெளிப்புற அணுக்கள் சுவர்களுக்குள் ஆழமாக புதைந்து தொப்புள் கொடியாக உருவாகும்.

கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருக்க உணவு மட்டும் காரணமல்ல, கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருப்பதற்கு தொப்புள் கொடியும் முக்கிய காரணமா உள்ளது. விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகள் இரண்டும் இந்த குழந்தையை உருவாக்குவதுடன், தொப்புள் கொடியையும் சேர்த்து உருவாக்குகின்றது.

அதேபோல் கருமுட்டைகள் தானாகவே கருப்பையில் சுவற்றில் பதிந்து, கருப்பை உட்புறங்களில் உள்ள அணுக்கள் அனைத்தும் வளர்ச்சியடைந்து, சிசுவாக உருவாக்கிறது.

அதேபோல் வெளிப்புறங்களில் உள்ள அணுக்கள் அனைத்தும், கருப்பை உள்புறத்தில் ஆழமாக பதிந்து தொப்புள் கொடியை உருவாக்குகின்றது.

இதையும் படியுங்கள்–> அரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா..? எப்படி..?

குழந்தை நலன்  – தொப்புள் கொடிக்கு பராமரிப்பும் கவனிப்பும் தேவைப்படும்..!

உங்கள் குழந்தையை போலவே உங்கள் தொப்புள் கொடியும் கூட ஊட்டச்சத்துக்களை எதிர்ப்பார்க்கும். அதனால் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், சீரான உடற்பயிற்சிகள் மற்றும் மதுபானம், நிக்கோடின் அல்லது ஜங்க் உணவுகளை விட்டு தள்ளி இருப்பது மிகவும் அவசியமாகும்.

இல்லையென்றால் அது தொப்புள் கொடியை பாதித்துவிடும். அப்படி நடக்கையில் பாதிக்கப்பட போவது உங்கள் குழந்தை தான்.

குழந்தையைப் போன்று தொப்புள் கொடியும் அதே மரபணுக்களைத் தான் கொண்டுள்ளது

ஆம், இது நூற்றுக்கு நூறு உண்மை. சொல்லப்போனால், பிரசவத்திற்கு முன்னான சோதனைகளில் தொப்புள் கொடியில் இருந்து சேகரிக்கப்பட்ட அணுக்கள், பிறப்பு நிலைக் கோளாறுகளை சீக்கிரமாகவே கண்டுபிடிக்க உதவும். இருப்பினும், இவ்வகையான சோதனைகள் ஆபத்தானது என்பதால் அவைகளை தவிர்க்க வேண்டும்.

குழந்தை நலன்  – தொப்புள் கொடி குழந்தையை உயிருடன் வைத்திருக்கும்

உங்கள் உடல், உங்கள் சிசுவை வெளிப்புற பொருளாக கருதி, அதனை நிராகரிக்காமல் இருப்பதற்கு காரணமே உங்கள் தொப்புள் கொடி தான்.

அதற்கு பிறபொருளெதிரிகள் சத்துக்களை அளித்து சிசுவை பாதுகாக்கிறது. தொற்றுக்களுக்கு எதிராக சிசு போராடுவதற்கும் கூட இந்த பிறபொருளெதிரிகள் உதவுகிறது.

குழந்தை நலன்  – தொப்புள் கொடியின் செயல்கள் (Umbilical cord function):

Umbilical cord function – தொப்புள் கொடி எச்.சி.ஜி. என்ற ஹார்மோனை சுரக்கும். கருப்பைகள் முட்டைகளை வெளியேற்றாமல் தடுக்கவும், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த ஹார்மோன் உதவிடும்.

இதனால் கருவில் இருக்கும் உங்கள் குழந்தையின் வளர்ச்சி அமைதியாக நடைபெறும்.

Umbilical cord function – ஹ்யூமன் ப்ளசெண்டல் லாக்டோஜென் (எச்.பி.எல்) என்பதை இது சுரக்கும்.

இதனால் கருவுற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு இது உங்களை தயார் படுத்தும்.

Umbilical cord function – எப்படி ஒவ்வொரு குழந்தையும் வேறுபட்டு இருக்கிறதோ, தொப்புள் கொடியும் கூட அதே போல தான்.

ஒவ்வொரு கர்ப்பத்திற்கும் அதன் அளவு, வடிவம் போன்றவைகள் மாறுபடும்.

Umbilical cord function – அதேபோல் ஒரு பெண்ணுக்கும் மற்ற பெண்ணுக்கும் இடையே கூட அது மாறுபட்டே இருக்கும். இருப்பினும் அதன் வேலையை அது திறம்படவே செய்யும்.

உங்கள் தொப்புள் கொடியின் தோரணை சிசுவின் நலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே மாதிரி பிரசவத்தின் போது, பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதும் அதன் தோரணையே.

Umbilical cord function – முன்புற தொப்புள் கொடி என்றால் சிசேரியன் செய்ய வேண்டி வரும். அதுவே பின்புற தொப்புள் கொடி என்றால் சுகப்பிரசவம் ஆகலாம்.

குழந்தைக்கு உணவு மற்றும் ஆக்சிஜென் கொடுக்கும் வகையில் இரண்டுமே அதன் பணிகளை திறம்பட புரியும்.

Umbilical cord function – குறிப்பிட்ட காரணத்திற்காக உங்கள் உடலுக்குள் வளரும் உறுப்பே தொப்புள் கொடி. அதன் நோக்கம் நிறைவேறியவுடன் அது தூக்கி எறியப்படும். மற்ற பயனற்ற உடலுறுப்புகளை போல வேலை முடிந்தாலும் கூட அது உள்ளேயே தங்காது.

Umbilical cord function – குழந்தைக்கு பிறகே அது பிறக்கிறது தொப்புள் கொடி பிறக்காமல் உங்கள் பிரசவம் முழுமை அடையாது.

Umbilical cord function – குழந்தை பிறந்து விட்ட போதிலும், தொப்புள் கொடியை வெளியே எடுக்கும் வரை நீங்கள் இறுக்கங்களை உணரலாம்.

தொப்புள் கொடி பிரசவத்தை பிறப்பிற்கு பின் என கூறுவார்.

Umbilical cord function – பிரசவமான பின்பும் கூட, கருவை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி, உயிருடன் தான் இருக்கும் ஆனால் சில நிமிடங்களுக்கு மட்டும்.

அதுவும் உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க தொப்புள் கொடி வெட்டி எடுக்கப்பட்ட பின்பு, அது செயலாற்றுவது நின்று விடும். அதன் பின் அது ஒரு மருத்துவ குப்பையே.

இதையும் படியுங்கள்–> சுக‌ப்பிரசவம் ஆகணுமா ? Normal Delivery Tips in Tamil..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now