குழந்தைகள் சண்டை
வணக்கம் நண்பர்களே..! குழந்தைகள் இருக்கும் வீடு எப்பொழுதும் சத்தமாக தான் இருக்கும். ஒன்றுமில்லாத விஷயத்துக்கு சண்டை அதிகமாக போடுவார்கள். சண்டைகளை சமாதானப்படுத்துவதற்கு பெற்றோர்கள் பல வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் பேசும் வார்த்தைகள் சமாதானப்படுத்தும். சில வார்த்தைகள் சண்டையை அதிகப்படுத்தம். பெற்றோர்கள் குழந்தைகள் முன்னடி சண்டை போட கூடாது. நீங்கள் முதலில் சண்டை போடாமல் இருந்தாலே குழந்தைகள் சண்டை போட மாட்டார்கள். இப்போது குழந்தைகள் சண்டை போடும் போது பெற்றோர்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது அது என்னென்ன என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ குழந்தைகளை வளர்த்தால் இப்படி தான் வளர்க்க வேண்டும்..
குழந்தைகள் சண்டை போடும் போது பெற்றோர்கள் சொல்ல கூடாத வார்த்தைகள்:
வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலே வீடு கலகலவென்று இருக்கும். குழந்தைகள் எப்பொழுதும் ஒற்றுமையாக தான் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆனால் கண்டிப்பா சண்டை போடாமல் இருக்க முடியாது.
குழந்தைகள் சண்டை போட்டு அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள். அதில் வந்து பெரியவர்கள் தலையிட்டால் சில சண்டைகள் சமாதானம் ஆகிவிடும். சில சண்டைகள் பெரிதாகிவிடும்.
நீங்கள் சண்டைகளை சமாதானப்படுத்தும் போது நீதானே பெரியவன் விட்டு கொடுத்தால் என்ன என்று சொல்ல கூடாது.
அடுத்து சாதாரண விஷயத்தை பெரிதுப்படுத்துகிறீர்கள் என்று கூற கூடாது.
உன்னால் தான் பிரச்சனை வருகிறது.
உங்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் போல் இருக்க மாட்டுகிறீர்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு (Compare) பண்ணி பேச கூடாது.
உன் தம்பி அல்லது தங்கையிடம் இப்படி சண்டை போட கூடாது. இப்படி சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெறுத்து கொள்ளாதீர்கள்.
மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை சொல்லும் போது சில நேரங்கள் சமாதானம் ஆகிவிடும். சில நேரம் சண்டையை அதிகப்படுத்தும்.
சண்டைகள் வராமல் இருப்பதற்கு நீங்கள் அதாவது பெற்றோர்கள் ஆகிய நீங்கள் சண்டை போடாமல் இருக்க வேண்டும். உங்களிடம் தான் எல்லா விஷயமும் கற்று கொள்கிறார்கள். குழந்தைகள் முன்னடி நீங்கள் சண்டை போடாமலே இருந்தாலே அவர்கள் சண்டை போடாமல் இருப்பார்கள்.
உங்களிடமிருந்து தான் குழந்தைகள் அன்பு, நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல், நேர்மையாக இருப்பது என்று இன்னும் பல விஷயங்களை கற்று கொள்கிறார்கள். அதனால் குழந்தைகள் முன்னாடி சண்டை போடாதீர்கள்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |