பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் பாலூட்டும்போது, தாயின் உடலில் ஆற்றல் குறைகிறது. தன்னுடைய உணவின் மூலமாக குழந்தைக்கு உணவு செல்வதால், பசி அதிகரிக்கும். அப்படி பசிக்கும்போது, வயிறை நிரப்புவதற்காக மட்டும் சாப்பிடும் சில உணவுகள் உடல் எடையை அதிகரித்துவிடுகின்றன.

அது போன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, சில குறிப்பிட்ட காலை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக, தாயின் உடலுக்கு ஆற்றலும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

பருப்பு வகைகள்:

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் பாதாம், பிஸ்தா முந்திரி போன்ற பருப்பு வகைகளில் மிக அதிக அளவில் புரதச்சத்து இருக்கின்றது. மேலும் அவை உடலுக்குத் தேவையான நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன.

அதனால் லேசாக வறுக்கப்பட்ட பருப்பு வகைகளை சாப்பிடுவதால் வயிறும் நிரம்பிவிடும்.

முட்டை:

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் பாலூட்டும் தாய்மார்கள் காலையில் சாப்பிடுவதற்கான சிறந்த உணவு நன்கு வேகவைத்த முட்டை தான். வேகவைத்த முட்டை முழுக்க முழுக்க புரதம் நிரம்பியது.

பிரெட்:

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் கோதுமையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கோதுமை பிரெட் எடுத்துக் கொள்வது நல்லது.

ஜாம் , சீஸ் போன்றவற்றை வைத்து சாப்பிடுவதற்குப் பதிலாக, கொத்தமல்லி இலை, தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை நறுக்கி உள்ளே வைத்து சான்விச் போல சாப்பிடலாம். அன்றைய நாள் முழுவதிற்குமான உடலுக்குத் தேவையான வைட்டமின்களைத் தருகிறது.

ஆப்பிள்:

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய பழம்கள் ஆப்பிள் மிகச் சிறந்த காலை உணவு. ஆப்பிள் உடன் வேர்க்கடலை பட்டர் சேர்த்து சாப்பிட, வயிறு வேகமாக நிறைந்துவிடும். உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் கிடைக்கும்.

சுக‌ப்பிரசவம் ஆகணுமா ? Simple Normal Delivery Tips in Tamil..!

தயிர்:

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் தயிரில் அதிக அளவிலான கால்சியம் நிரம்பியிருக்கிறது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

அதிலும் தயிருடன் பழங்களையும் சேர்த்துப் போட்டு சாப்பிடலாம். ஆனால் தயிரில் இனிப்பு மற்றும் வேறு ஃபிளேவர் கொண்ட தயிரைப் பயன்படுத்தக்கூடாது.

சாலட்

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் பச்சை காய்கறிகளையும் நல்ல பழங்களையும் ஒன்றாகச் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

இதில் உடலுக்குத் தேவையான எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதோடு, போதுமான அளவு நீர்ச்சத்தையும் தருகிறது.

தாய்ப்பால் சுரக்க:

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள்.

மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி – முழுமையான விவரங்கள்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்