பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை ஏன் தண்ணீர் குடுக்க கூடாது தெரியுமா..?

Advertisement

6 மாத குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா

வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக குழந்தைகள் என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும் அல்லவா..! குழந்தைகள் இருக்கும் வீடு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். பொதுவாக ஒருவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்றால், அந்த பெண்ணை குழந்தை பிறக்கும் வரை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்து கொள்வார்கள். இவ்வளவு ஏன் குழந்தை பிறந்தும் அந்த குழந்தை வளர்ந்து வரும் வரை கண்ணும் கருத்துமாய் பாரத்து பார்த்து வளர்ப்பார்கள்.

ஆனால் குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை அந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுப்பார்கள். அப்போது நம் அனைவருக்குமே ஒரு கேள்வி எழும். 6 மாத குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா..? கொடுக்க கூடாதா..? இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பாதியை முழுதாக படிக்கவும்..!

7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை ஏன் தண்ணீர் குடுக்க கூடாது..? 

Why a newborn baby should not drink water till 6 months

பொதுவாக பிறந்த குழந்தைகளை அனைவருமே பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அதுபோல 6 மாதம் வரை குழந்தைக்கு தாய் பால் மட்டும் தான் கொடுப்பார்கள். இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான்.

அதுபோல மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். நாம் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். இதில் சுவை இல்லையென்றாலும் அதிக சத்துக்கள் இருக்கிறது. தண்ணீர் உயிர் காக்கும் மருந்தாக பயன்படுகிறது.

குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

பொதுவாக பிறந்து 6 மாதம் வரை குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். ஆனால் தண்ணீரும் தாய்ப்பாலும் ஓன்று தானே, அதாவது தாய்ப்பாலை போல நீரும் ஒரு திரவம் தான். அதை ஏன் குழந்தைக்கு கொடுக்க கூடாது என்று யோசிப்பீர்கள். அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.

பிறந்து ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  காரணம் பிறந்த குழந்தைகளின் உடல் உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாமல் இருக்கும். அதுபோல பிறந்த குழந்தையின் வயிற்றில் 5 அல்லது 10 மில்லி அளவிற்கு தான் உணவுக்கான இடம் இருக்கும். அதனால் சத்துக்கள் இல்லாத தண்ணீரை கொடுத்து குழந்தையின் வயிற்றை நிரப்பினால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.  

இதன் காரணமாக தான் 6 மாத குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் 6 மாதத்திற்கு பிறகு குழந்தையின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாளும் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips tamil
Advertisement