ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்..!

வெஜிடேபிள் முட்டை ரோல்

வெஜிடேபிள் முட்டை ரோல் செய்முறை விளக்கம்..!

நாம் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு என்ன செய்வது என்று அதிகமாக யோசிப்போம் எந்த உணவை செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவது இல்லை என்று பல தாய்மார்கள் சொல்ல கேட்டிருப்போம். இனி அந்த கவலை வேண்டாம் இனிமேல் காலை உணவாக உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ் (vegetable egg roll recipe) செய்து கொடுங்கள். உங்கள் குழந்தை இந்த டிஸை விரும்பி அதிகம் சாப்பிடுவார்கள். சரி ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ் (vegetable egg roll recipe) எப்படி செய்வது என்று இங்கு நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

 • சப்பாத்தி – 1
 • உருளைக்கிழங்கு – 1 (வட்டமாக மற்றும் நைசாக நறுக்கியது)
 • கத்திரிக்காய் – 1 (துண்டாக நறுக்கியது)
 • முட்டை 2 – (மிக்சியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்)
 • வெங்காயம் 1 – (பொடியாக நறுக்கியது)
 • பச்சை மிளகாய் 1 – (பொடியாக நறுக்கியது)
 • மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் 1 – சிட்டிகை
 • முட்டை கோஸ் 2-3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
 • தக்காளி மற்றும் சில்லி சாஸ் – தேவையான அளவு
 • எண்ணெய் 2 – டேபிள் ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு.

ஹோட்டல் தோசை போல மொறு மொறுன்னு வேண்டுமா அப்ப இதை செய்ங்க

வெஜிடேபிள் முட்டை ரோல் செய்முறை (Vegetable Egg Roll Recipe):

 • வெஜிடேபிள் முட்டை ரோல் செய்வதற்கு முதலில் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.
 • அதன் பின்பு அவற்றில் நறுக்கிய கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.
 • கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் அவற்றில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக கிளரிவிட வேண்டும்.
 • அதன் பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையை இவற்றில் சேர்த்து நன்றாக கிளரி இறக்க வேண்டும்.
 • பின்பு சப்பாத்தியின் மேல் இந்த கலவையை வைத்து அதன் மேல் தக்காளி மற்றும் சில்லி சாஸை ஊற்றி ரோல் செய்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் (vegetable egg roll recipe) தயார்.

உங்கள் சப்பாத்தி பஞ்சி போல சாஃப்டா உப்பி வர இப்படி try பண்ணுங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.