ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி ..?

Advertisement

ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி ..?

ஆப்பிள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். அதிக ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் ஆப்பிலும் ஒன்று இந்த ஆப்பிளை வைத்து வீட்டிலேயே ஈசியாக ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி (apple jam recipe in tamil) மற்றும் ஆப்பிள் ஜுஸ் செய்வது எப்படி என்று இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.

பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி (Apple jam recipe in tamil)..!

தேவையான பொருட்கள்:

  1. ஆப்பிள் – 2
  2. சர்க்கரை – 1 கப்
  3. எலுமிச்சை பழம் – 1/2
  4. தண்ணீர் – 1/2 கப்

ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி (Apple jam recipe in tamil) – செய்முறை :

ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்.

நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்.

5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்.

பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

பிறகு நன்றாக வேக வைத்து, கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழவழப்பு தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.

ஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

நன்றாக கிளறி ஆற விடவும். ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் – இனிப்பு சமோசா..!

குறிப்பு:

  1. லெமன் ஜூஸ் சேர்ப்பது ஆப்பிள் ஜாம் கெட்டு போகாமல் இருப்பதற்கு மட்டுமே எனவே சரியான அளவில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  2. 1 பெளல் ஆப்பிள் துண்டுகளுக்கு 1 கப் சர்க்கரை என்ற விகிதத்தில் சேர்த்து கொள்ளுங்கள். இனிப்பு சுவை அதிகம் தேவைப்பட்டால் அதற்கேற்ப சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்.

ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி (Apple juice in tamil)

தேவையான பொருட்கள்:

  1. நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்,
  2. சர்க்கரை – இரண்டு டீஸ்பூன்,
  3. லவங்கப் பட்டைப் பொடி – அரை டீஸ்பூன்,
  4. குளிர்ந்த தண்ணீர் – ஒரு கப்.

ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி (Apple juice in tamil) – செய்முறை :

ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும்.

மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும்.

விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.

Advertisement