உடைத்த கோதுமை பாயாசம் செய்முறை ..! Godhumai payasam seivathu eppadi tamil..!

godhumai payasam

கோதுமை பாயாசம் செய்முறை (Godhumai payasam seivathu eppadi tamil)..!

கோதுமை பாயாசம் எப்படி செய்வது? உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி (Godhumai payasam seivathu eppadi tamil) மிகவும் சுவையானது மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த ரெசிபி. இந்த ரெசிபி சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதிக ஆரோக்கியமானதும் கூட.

சரி வாங்க சுவையான உடைத்த கோதுமை பாயாசம் (godhumai payasam) ரெசிபி எப்படி செய்வது என்று நாம் இங்கு காண்போம்.

கோதுமை பாயாசம் (Godhumai Payasam) செய்ய தேவையான பொருட்கள்:

  1. உடைத்த கோதுமை – 1 கப்
  2. பாதாம் பருப்பு, முந்திரி திராட்சை – தேவைக்கு ஏற்ப
  3. வெல்லம் – 1 கப்
  4. நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் – 1 கப்
  6. பால் – 1/2 கப்
  7. தண்ணீர் – 3 கப்
  8. பாப்பி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
  9. ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்

கோதுமை பாயாசம் செய்முறை (Godhumai Payasam):

Godhumai payasam seivathu eppadi tamil step / கோதுமை பாயாசம் எப்படி செய்வது? 1

கோதுமை பாயாசம் செய்ய (godhumai payasam) ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி விடவும்.

பிறகு குக்கரில் வடிகட்டி வைத்துள்ள கோதுமை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருப்பு வேகவைப்பது போல் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

Godhumai payasam seivathu eppadi tamil step / கோதுமை பாயாசம் எப்படி செய்வது? 2

விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆறியதும் குக்கரை திறக்கவும்.

அதன் பிறகு அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

Godhumai payasam seivathu eppadi tamil step / கோதுமை பாயாசம் எப்படி செய்வது? 3

அதே கடாயில், வெல்லத்தை சேர்த்து. அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.

வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.

Godhumai payasam seivathu eppadi tamil step / கோதுமை பாயாசம் எப்படி செய்வது? 4

அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.

நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை செய்வது எப்படி..?

பின்பு அவற்றை மூடியை கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.

கோதுமை பாயாசம் எப்படி செய்வது? / Godhumai payasam seivathu eppadi tamil step: 5

அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.

தித்திக்கும் சுவையான உடைத்த கோதுமை பாயாசம் ரெடி (godhumai payasam) பாயாசத்தை வேறு பாத்திரத்தில் மாற்றி பின் பரிமாறலாம்.

குறிப்பு:

Godhumai payasam seivathu eppadi tamil:- பாயாசம் செய்யும் போது தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

உடைத்த கோதுமையை குக்கரில் வேகவைக்கும் முன் சிறிது நேரம் ஊற வைத்த பின்பு குக்கரில் வேகவைக்கவும்.

மீதமாகிய சாதத்தில் கட்லட் செய்யலாமா?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal