சத்தான சுவையான எள்ளு சாதம் செய்வது எப்படி? | Ellu Rice Recipe in Tamil

Advertisement

எள்ளு சாதம் செய்வது எப்படி? | Sesame Rice Recipe In Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் சத்துக்கள் நிறைந்துள்ள எள்ளு சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம். எள் சாதம் டேஸ்டானது மட்டுமல்ல உடலுக்கு அதிகமாக சத்தும் தரக்கூடிய உணவாகும். எள் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? காலையில் அந்த எள்ளைக் கொண்டு சமையல் செய்ய ஆசையா? அப்படியானால் எள்ளைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு கலவை சாதம் (ellu sadam seivathu eppadi) செய்யலாம் வாங்க..

அருமையான சுவையில் தேங்காய் பால் சாதம் ரெசிபி

எள்ளு பொடி தயாரிக்க:

  • வெள்ளை எள்ளு – 2 மேசைக்கரண்டி
  • துவரம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 6
  • கொப்பரை தேங்காய் – 1 மேசைக்கரண்டி (நறுக்கியது)

எள்ளு சாதம் செய்ய – தேவையான பொருள்:

  • எண்ணெய் – தேவையான அளவு
  • கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • வேர்க்கடலை – சிறிதளவு
  • முந்திரி பருப்பு – சிறிதளவு
  • பெருங்காய தூள் – 1 சிட்டிகை
  • காய்ந்த மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • வேகவைத்த சாதம் – 1 கிண்ணம் அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • அரைத்து வைத்துள்ள எள்ளு பொடி
  • நெய் – 2 தேக்கரண்டி

எள்ளு சாதம் செய்வது எப்படி:

ஸ்டேப்: 1

முதலில் கடாயில் எண்ணெய் சேர்க்காமல் 2 மேசைக்கரண்டி வெள்ளை எள்ளுவை வறுக்கவும்.

ஸ்டேப்: 2

அதனுடன் 1 மேசைக்கரண்டி துவரம் பருப்பு, 6 காய்ந்த மிளகாய், 1 மேசைக்கரண்டி நறுக்கிய கொப்பரை தேங்காயை சேர்த்து வறுத்துக்கொள்ளவும். எள்ளானது நன்கு வெடிக்கும் வரை வறுக்கவும்.

ஸ்டேப்: 3

அடுத்து தனியாக ஒரு தட்டில் ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

எள்ளு சாதம் செய்ய இப்போது கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெயுடன் 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடுகு 1 டீஸ்பூன், வேர்க்கடலை & முந்திரி பருப்பு சிறிதளவு, ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் 2, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

ஸ்டேப்: 5

அடுத்து கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் நிறம் மாறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டி விடவும்.

ஸ்டேப்: 6

அடுத்து கடாயில் கிளறி வைத்துள்ளதில் வேகவைத்த சாதத்தினை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

ஸ்டேப்: 7

இப்போது மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள எள்ளு பொடியினை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து சாதத்தை கிளறவும். 20 நிமிடத்தில் சுவையான எள்ளு சாதம் ரெடியாகிட்டு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement