குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் – இனிப்பு சமோசா..!

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ்

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) :

உங்கள் குழந்தைக்கு லீவுல என்ன ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil)  செய்து கொடுப்பது என்று யோசிக்கிறீங்களா அப்படினா இந்த இனிப்பு சமோசாவை செய்து கொடுங்கள், அப்பறம் பாருங்க உங்கள் குழந்தை எப்படி விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று. இந்த இனிப்பு சமோசாவின் சுவை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) ரெசிபி.

பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா ?

சரி வாங்க குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) எப்படி செய்வது என்று நாம் இங்கு காண்போம்.

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) சமோசா : தேவையான பொருட்கள்:

 1. மைதா மாவு – ஒரு கப்
 2. உப்பு – ஒரு சிட்டிகை
 3. ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்
 4. மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
 5. தேங்காய் துருவல் – அரை கப்
 6. பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
 7. வறுத்த பிரெட் தூள் – கால் கப்
 8. சர்க்கரை – அரை கப்
 9. ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
 10. உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதம், முந்திரி) 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
 11. எண்ணெய் – தேவையான அளவு

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) செய்முறை:

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் செய்வதற்கு முதலில் மைதா மாவுடன் ஆலிவ் ஆயில், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக அடித்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மாவின்மீது கொஞ்சம் எண்ணெய் தடவி ஈரத்துணியால் அந்த மாவை சுற்றி அரை மணி நேரம் வரை மூடி வைக்கவும்.

உடைத்த கோதுமை பாயாசம் செய்முறை ..!

பூரணம் தயாரிக்க:

தேங்காய் துருவலுடன், பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய், உடைத்த நட்ஸ் வகைகள் மற்றும் வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதுவே இனிப்பு பூரணம்.

பிறகு பிசைந்த மாவை சிறிய உருண்டையாக உருட்டி நீளவாக்கில் சப்பாத்தி போல் தேய்க்கவும்.

அதன் பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தோசைக்கல் சூடானதும் சப்பாத்தியை போட்டு இரு புறமும் லேசாக அதாவது அரை நிமிடம் வேகவிட்டு எடுக்கவேண்டும். (முழுவதும் வேகக்கூடாது அரை வேக்காட்டில் சப்பாத்தி இருக்க வேண்டும்).

அதன் பின்பு சப்பாத்தியின் மீது ஈரத்துணியால் சுற்றி மூடவேண்டும். (அப்படியே வைத்தோம் என்றால் சப்பாத்தி காய்ந்துவிடும் அதன் பிறகு சமோசா போட வராது. தேவைப்படும் போது பயன்படுத்த வேண்டும்)

பிறகு சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவேண்டும். ஓரம் முழுவதும் தண்ணீரால் தடவ வேண்டும். நேர்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும் .

அதன் பிறகு இவற்றின் நடுவில் பூரணத்தை வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதேமாதிரி செய்து கொள்ளவும்.

அடுப்பில் கடையை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

டோரா கேக் செய்வது எப்படி?

அவ்வளவுதான் குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் (Baby Snacks Recipes In Tamil) இனிப்பு சமோசா ரெடி.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.