குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை !!!

Advertisement

வெஜ் நூடுல்ஸ் செய்முறை (Vegetable noodles recipe in tamil)..!

நூடுல்ஸ் செய்வது எப்படி? குழந்தைகளின் உணவு பட்டியலில் மிகவும் பிடித்த உணவாக முதலில் இருப்பது நூடுல்ஸ் தான். வீட்டில் நூடுல்ஸ் அம்மா செய்றாங்க என்று குழந்தைக்கு தெரிஞ்சா போதும் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாங்க. வீட்டைவிட்டே நகரமாட்டாங்க அப்படி பிடிக்கும் நூடுல்ஸ் குழந்தைகளுக்கு.

குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் – இனிப்பு சமோசா..!

சரிவாங்க குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

வெஜ் நூடுல்ஸ் செய்முறை (Vegetable noodles recipe in tamil) – தேவையான பொருட்கள்:

  1. காய்கறிகள் – கோஸ், பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி.
  2. மேகி நூடுல்ஸ் – 2 பாக்கெட்
  3. வெங்காயம் –1 (நீளமாக நறுக்கிக்கொள்ளவும்)
  4. தக்காளி – 1/4 துண்டு
  5. கொத்தமல்லி இலை – சிறிதளவு
  6. இஞ்சி – 1 துண்டு
  7. பூண்டு – 4 பல்
  8. சோம்பு – 1/4 தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய் – 2
  10. மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
  11. மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
  12. சீரகம் – 1/4 தேக்கரண்டி
  13. எலுமிச்சை சாறு – சில துளிகள்
  14. எண்ணெய் – தேவையான அளவு
  15. உப்பு – தேவையான அளவு
சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!

வெஜ் நூடுல்ஸ் செய்முறை (Vegetable noodles recipe in tamil) :-

நூடுல்ஸ் செய்வது எப்படி / Noodles seivathu eppadi tamil step: 1

நூடுல்ஸ் செய்வது எப்படி: முதலில் காய்கறிகளை சுத்தமாக கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, சோம்பு மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து விழுதாக வைத்துக்கொள்ளவும்

நூடுல்ஸ் செய்வது எப்படி / Noodles seivathu eppadi tamil step: 2

பின்பு குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்டு குக்கரை இறக்கி வைக்கவும்.

வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

நூடுல்ஸ் செய்வது எப்படி / Noodles seivathu eppadi tamil step: 3

இப்பொழுது அடுப்பில் கடாய் வைத்து அவற்றில் எண்ணெயை ஊற்றி சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்கவும், பின்பு அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின்பு அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கவும்.

நூடுல்ஸ் செய்வது எப்படி / Noodles seivathu eppadi tamil step: 4

பச்சை வாசனை போன பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து கிளறவும்.

பின்பு அதனுடன் நூடுல்ஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

நூடுல்ஸ் செய்வது எப்படி / Noodles seivathu eppadi tamil step: 5

காய்கறிகளை வேக வைத்த தண்ணீரை நூடுல்ஸ் வேகவைக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

உங்களது தேவைக்கேற்ப எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

நூடுல்ஸ் உதிரி, உதிரியாக வரும். நூடுல்ஸை மூடி வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.

Noodles seivathu eppadi tamil step: 6

நூடுல்ஸ் வெந்ததும் உப்பு சரிபார்த்து அடுப்பை அனைத்து விடவும்.

இப்பொழுது சுவையுள்ள வெஜ் நூடுல்ஸ் செய்முறை முடிந்தது.

நூடுல்ஸ் செய்வது எப்படி என்ற செய்முறை (vegetable noodles recipe in tamil) விளக்கத்தை தெரிந்து கொண்டீர்களா? சரி உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்..!

பிஸ்கட் லட்டு செய்வது எப்படி ..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement