கிராமத்து ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு சமையல் | Kootanchoru Recipe in Tamil

Kootanchoru Recipe in Tamil

கூட்டாஞ்சோறு எப்படி செய்ய வேண்டும்? | Kootan Soru Seivathu Eppadi

பள்ளி விடுமுறை என்றாலே குழந்தைகள் அனைவரும் கூட்டாக சேர்ந்து வீட்டில் சமையலுக்கு வைத்திருக்கும் பொருள்களை எடுத்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடுவார்கள். கூட்டாஞ்சோறு செய்யும் போது சாதி மதம் இல்லாமல் அனைத்து குழந்தைகளும் அந்த நேரத்தில் சந்தோசமாக இருப்பார்கள். நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சமைத்த கடைசி தலைமுறையினர் நாமாகத்தான் இருப்போம். இன்றைய கால கட்டத்தில் கூட்டாஞ்சோறு என்பதெல்லாம் மொத்தமாக மாறி குழந்தைகள் பாஸ்ட் புட் கடைகளில் வாங்கி சாப்பிடுவதில் ஆர்வத்தை செலுத்திவிட்டார்கள். சிறிய வயதில் செய்து விளையாண்ட கூட்டாஞ்சோறு சமையலை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..

அருமையான சுவையில் தேங்காய் பால் சாதம் ரெசிபி

கூட்டாஞ்சோறு செய்ய தேவையான பொருள்:

 • புழுங்கல் அரிசி – 250 கிராம்
 • கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
 • துவரம் பருப்பு – 100 கிராம்
 • தேங்காய் எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
 • பெருங்காயம் – 1 டீஸ்பூன்
 • அனைத்து வகையான காய்கள் – 1 கிண்ணம்
 • கருவேப்பிலை – சிறிது
 • முருங்கை கீரை – 1 கிண்ணம்
 • கடுகு – 1 டீஸ்பூன்
 • உப்பு – தேவைகேற்ப

அரைக்க தேவையான பொருள்:

 • தேங்காய் துருவல் – சிறிதளவு
 • புளி – 1 எலுமிச்சை அளவு
 • மிளகாய் வற்றல் – 3
 • மிளகு – 1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 • கருவேப்பிலை – சிறிதளவு
 • சீரகம் -1 டீஸ்பூன்

கூட்டாஞ்சோறு செய்முறை விளக்கம்:

ஸ்டேப்: 1

கூட்டாஞ்சோறு செய்வதற்கு முதலில் கத்திரிக்காய், வாழைக்காய், பட்டை அவரைக்காய் ஆகியவற்றை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அடுத்து ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை வேக வைக்கவும். துவரம் பருப்பானது பாதி அளவிற்கு வெந்தவுடன் புழுங்கல் அரிசி பொடியாக வெட்டி வைத்துள்ள காய்கறிகள், அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சிறிதளவு, முருங்கைக்கீரை, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

சத்தான சுவையான எள்ளு சாதம் செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 3

ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சுமார் 15 நிமிடம் வேக வைக்கவும். சாதம் வெந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

ஸ்டேப்: 4

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, கடலை பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை சிறிது போட்டு தாளித்து சாதத்தில் விடவும். பிறகு அதை இறக்கிவிடவும். அவ்ளோதாங்க சுவையான கிராமத்து கூட்டாஞ்சோறு ரெடியாகிட்டு..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்