கருவாட்டு குழம்பு செய்வது எப்படி???
கருவாட்டு குழம்பு செய்வது எப்படி / Karuvattu kulambu vaibathu eppadi??? கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு என்றாலே பலபேருக்கு கொள்ள இஷ்டம் ஆனால் வீட்டில் கருவாட்டு குழம்பு வச்சீங்கனா கிராமத்து கருவாட்டு குழம்பு டேஸ்ட்டும், வாசனையும் வரமாட்டேங்குதா அப்படினா இப்படி டிரை செய்து பாருங்கள்.
சரி இப்போது கிராமத்து நெத்திலி (karuvadu kulambu) கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!
karuvattu kulambu seivathu eppadi – கருவாட்டு குழம்பு செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:
- நெத்திலி கருவாடு – 200 கிராம்
- கத்தரிக்காய் – 1/4 கிலோ
- முருங்கைக்காய் – 2
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 2 (நறுக்கியது)
- புளி – 1 எலுமிச்சை அளவு
- வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!
karuvadu kulambu – மசாலா அரைப்பதற்கு:
- சின்ன வெங்காயம் – 1 கையளவு
- மல்லித் தூள் – 50 கிராம்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- வரமிளகாய் – 2 (காய்ந்த மிளகாய்)
- கறிவேப்பிலை – சிறிது
- பூண்டு – 4 பற்கள்
- துருவிய தேங்காய் – 1/4 கப்.
சரி வாங்க கருவாட்டு குழம்பு செய்வது எப்படி (karuvadu kulambu) என்று பார்ப்போம்..!
நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி? karuvattu kulambu seivathu eppadi
கருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 1
நெத்திலி கருவாடு குழம்பு செய்வது எப்படி.? முதலில் கருவாட்டை வெந்நீரில் ஊறவைத்து சில நேரங்கள் கழித்து கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 2
பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
புளியை ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, ஊறியதும் புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.
கருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 3
ஒரு மண்சட்டியை எடுத்து கொள்ளவும் அவற்றை அடுப்பில் வைத்து மண்சட்டியில் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் காய்ந்தமிளகாயை வறுத்து, பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், மல்லித் தூள், சீரகம், பூண்டு, மிளகு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கி ஆறியதும் அதனுடன் தேங்காவை சேர்த்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
அம்மியில் அரைத்தால் (karuvadu kulambu) குழம்பு சுவையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்கும்.
கருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 4
பின்பு மற்றொரு மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அவற்றில் கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
காய்கள் நன்றாக வெந்ததும் அவற்றில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விடவும்.
கருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 5
பின்பு கரைத்து வைத்துள்ள புளிச்சாறை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். புளிசாறானது நன்கு கொதித்ததும், அதில் நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
அம்புட்டுதான் சுவையான கிராமத்து நெத்திலி கருவாடு குழம்பு தயார்.
சமைக்கும் போதே நாவில் எச்சில் ஊறவைக்கும் கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பை வைத்து வீட்டில் பாராட்டை பெறுங்கள்.
கிராமத்து (karuvadu kulambu) கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா சரி வீட்டில் செய்து அசத்துங்கள்..!
டேஸ்டான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு!!!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |