கொள்ளு சாதம் & கொள்ளு ரசம் வைப்பது எப்படி?

கொள்ளு ரசம் செய்முறை

கொள்ளு சாதம் செய்வது எப்படி?

கொள்ளு ரசம் செய்முறை / கொள்ளு ரசம் செய்வது எப்படி: ‘என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். ஆரோக்கியமற்ற உணவு முறைகளே முக்கிய காரணமாகும். எனவே கொழுப்பை குறைக்கும் சிறுதானிய கொள்ளு சாதம் செய்வது எப்படி? என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..!

கொள்ளு ரசம் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகை ஸ்பெஷல் – பாதாம் பூரி ரெசிபி..!

சிறுதானிய கொள்ளு சாதம் – தேவையான பொருட்கள்:

 1. வரகரிசி/ சாமை/குதிரைவாலி – 100 கிராம்
 2. கொள்ளு – 50 கிராம்
 3. பூண்டு – 6 பல்
 4. உப்பு – தேவையான அளவு
 5. எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து பொடி செய்து கொள்ள:

 1. சீரகம் – 5 கிராம்
 2. கடலை பருப்பு – 20 கிராம்
 3. வெந்தயம் – 5 கிராம்
 4. மிளகு (black pepper)- 5 கிராம்
 5. கொத்தமல்லி – 30 கிராம்
 6. காய்ந்த மிளகாய் – 3

தாளிக்க :

 1. கடுகு – 5 கிராம்
 2. கருவேப்பிலை – தேவையான அளவு
 3. பெருங்காய தூள் – சிறிதளவு

சிறுதானிய கொள்ளு சாதம் செய்முறை:

கொள்ளு சாதம் செய்வது எப்படி? செய்முறை விளக்கம்: 1

கொள்ளு / வரகரிசி / சாமை அரிசி / குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி உதிரியாக வேகவைத்துக் கொள்ளவும்.

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொள்ளு சாதம் செய்வது எப்படி? செய்முறை விளக்கம்: 2

பின்பு வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.

கொள்ளு சாதம் செய்வது எப்படி? செய்முறை விளக்கம்: 3

பின்பு நறுக்கிய பூண்டை வதக்கி அவற்றுடன் வேகவைத்துள்ள கொள்ளு மற்றும் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

கொள்ளு சாதம் செய்வது எப்படி? செய்முறை விளக்கம்: 4

பின்பு வேகவைத்துள்ள சாதத்துடன் இந்த கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

இதை அனைவரும் விரும்பி உண்ணலாம், ஆரோக்கியமான மற்றும் சுவையான டேஸ்டான சிறுதானிய கொள்ளு சோறு தயார்.

நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி ? Easy Chicken Kulambu in Tamil..!

கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம் செய்முறை (Rasam Recipe Tamil):

Kollu-Rasamகொள்ளு ரசம் வைக்க (Rasam Recipe Tamil) – தேவையான பொருட்கள் :

 1. கொள்ளு – 1 கப்
 2. புளி – 1 நெல்லிக்கனி அளவு
 3. சீரகம், மிளகு (black pepper) – 1தேக்கரண்டி
 4. எண்ணெய் – 1 தேக்கரண்டி
 5. கடுகு – 1 தேக்கரண்டி
 6. தூள் பெருங்காயம் – 2 கிராம்
 7. பூண்டு (garlic)- 6 பல்

கொள்ளு ரசம் செய்முறை (Rasam Recipe Tamil):

கொள்ளு ரசம் செய்முறை / How To Make Rasam In Tamil Step: 1

கொள்ளு ரசம் வைப்பது எப்படி: இந்த கொள்ளு ரசம் செய்வதற்கு முதலில் கொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வருத்து, பின்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொள்ளு ரசம் செய்முறை / How To Make Rasam In Tamil Step: 2

புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

சீரகம் மற்றும் மிளகாய் (black pepper) இடித்து கொள்ளவும்

பூண்டை (garlic) தட்டி கொள்ளவும்.

கொள்ளு ரசம் செய்முறை / How To Make Rasam In Tamil Step: 3

கொள்ளு நன்கு வெந்ததும் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

அதன் பிறகு கொள்ளை தண்ணீரில் கரைத்தால் கெட்டியான கொள்ளுதண்ணீர் கிடைக்கும்.

பிறகு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, பெருங்காயம் மற்றும் கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு தாளித்த பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அவற்றில் ஊற்றவும்.

கொள்ளு ரசம் செய்முறை / How To Make Rasam In Tamil Step: 4

அதன் பிறகு இடித்து வைத்துள்ள சீரகம், மிளகு மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

நுரையாக வரும் போது கொஞ்சம் கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான கொள்ளு ரசம் தயார்.

கொள்ளு ரசம் செய்முறை / How To Make Rasam In Tamil Step: 5

இந்த சுவையான கொள்ளு ரசம் கொலஸ்ட்ரால் குறைய மிகவும் சிறந்த உணவாக உள்ளதால். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அதிகளவு கொள்ளு ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு