சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்!!

Chicken Gravy in Tamil

சிக்கன் கிரேவி செய்வது எப்படி? | Chicken Gravy in Tamil

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கனில் பலவகையான ரெசிப்பீஸ் செய்யலாம். அதாவது சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் கிரேவி என்று பலவிதமான ரெசிபி செய்யலாம். அவற்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் சிக்கன் கிரேவி. இந்த சிக்கன் கிரேவியை மிகவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாமா? சரி வாங்க, இப்போது அந்த சிக்கன் கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து சுவைத்து பாருங்கள்.

சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

 1. சிக்கன் – 1/2 கிலோ
 2. பெரிய வெங்காயம் –  இரண்டு (நறுக்கியது)
 3. தக்காளி – ஒன்று (நறுக்கியது)
 4. பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
 5. இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன்
 6. மல்லி தூள் – 1 டீஸ் ஸ்பூன்
 7. மிளகு தூள் – 1 டீஸ் ஸ்பூன்
 8. மஞ்சள் தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
 9. கருவேப்பில்லை – தேவையான அளவு
 10. மிளகாய் தூள் – 1 டீஸ் ஸ்பூன்
 11. கரம் மசாலா – 1 டீஸ் ஸ்பூன்
 12. சோம்பு – 1 டீஸ் ஸ்பூன்
 13. எண்ணெய் –  தேவையான அளவு
 14. நறுக்கிய கொத்த மல்லி – தேவையான அளவு
 15. உப்பு – தேவையான அளவு

சிக்கன் கிரேவி செய்முறை:

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு சுத்த மான கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பெருஞ்சிரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 2

இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போனதும் சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை அதில் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி, மல்லி தூள், மிளகு தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

ஸ்டேப்: 4

பின்னர் கரம் மசாலா, கொத்த மல்லி சேர்த்து, எண்ணெயில் தாளித்த பூண்டை இதனோடு சேர்க்கவும். பின்னர் ஒரு நிமிடம் கழித்து சிக்கன் கிரேவியை அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.

அவ்வளவு தான் நான்கே ஸ்டேபிள் சுவையான கோழி கிரேவி தயார். ஒரு முறை வீட்டில் செய்து அசத்துங்கள் நன்றி..

பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!
சிக்கன் நகெட்ஸ்

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்