சுவையான சேமியா பிரியாணி செய்யலாம் வாங்க..!

Advertisement

சேமியாவில் பிரியாணி செய்வது எப்படி?

அரிசில் மட்டும் தான் பிரியாணி செய்ய முடியுமா? வாங்க நாம வித்தியாசமாக சேமியாவில் பிரியாணி செய்து அசத்திடுவோம்..!

தேவையான பொருட்கள்:

  1. சேமியா – ஒரு கப்
  2. நெய் – தேவையான அளவு
  3. இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் – ஒன்று (பொடிதாக நறுக்கி கொள்ளவும்)
  5. தக்காளி – இரண்டு (பொடிதாக நறுக்கி கொள்ளவும்)
  6. பச்சை மிளகாய் – 3
  7. பீன்ஸ் – 1/2 கப்
  8. கேரட் – 1/2 கப்
  9. பச்சைபட்டாணி – 1/4 கப்
  10. பிரியாணி இலை – ஒன்று
  11. ஏலக்காய் -1
  12. பட்டை – ஒரு சிறிய துண்டு
  13. கிராம்பு – ஒன்று
  14. உப்பு – தேவையான அளவு
  15. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  16. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  17. கரம்மசாலா – 1 ஸ்பூன்
  18. முந்திரி – 4 அல்லது 5
  19. முட்டை – ஒன்று

செய்முறை:

முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

பின்பு அதே வாணலியில் சிறிதளவு நெய் விட்டு ஒரு பிரியாணி இலை, ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் பொடிதாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் ஒரு கப் தக்காளி, 1/2 கப் பீன்ஸ், 1/2 கப் கேரட் மற்றும் 1/4 கப் பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும்.

அதாவது 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

மசாலா நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்க்க வேண்டும். ஒரு கப் சேமியாவுக்கு 1 1/2 கப் சேமியா சேர்க்க வேண்டும்.

தண்ணீர் சேர்த்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஒரு மூடியை கொண்டு மூடிவிடவும்.

இறுதியாக சேமியா வெந்ததும் ஒரு முட்டையை ஊற்றி நன்றாக கிளறி விட்டு திரும்பவும் ஒரு முறை வேகவைத்து இறக்கினால் போதும் சுவையான சேமியா பிரியாணி தயார்.

அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement