சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!

கறி தோசை செய்வது எப்படி

மதுரை கறி தோசை செய்வது எப்படி ???

சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி அதுவும் ஈஸியான முறையில் நாம் வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!

மதுரை கறி தோசை செய்வது எப்படி –  தேவையான பொருட்கள்:-

 1. மட்டன் கொத்து கறி – 200 கிராம்
 2. தோசை மாவு – ஒரு கப்
 3. வெங்காயம் – ஒன்று
 4. தக்காளி – ஒன்று
 5. முட்டை – 3
 6. இஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி
 7. மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
 8. மல்லி தூள் – 3/4 தேக்கரண்டி
 9. கரம் மசாலா – அரை தேக்கரண்டி
 10. மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
 11. மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
 12. சீரகதூள் – அரை தேக்கரண்டி
 13. எண்ணெய் – 3 தேக்கரண்டி
 14. கடுகு – அரை தேக்கரண்டி
 15. சோம்பு – அரை தேக்கரண்டி
 16. உப்பு – தேவைக்கேற்ப

பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

மதுரை கறி தோசை செய்வது எப்படி (Kari dosai seivathu eppadi) – செய்முறை:

 • மதுரை கறி தோசை செய்வது எப்படி (kari dosai seivathu eppadi) முதலில் கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். கறி நன்றாக பஞ்சாக வெந்திருக்க வேண்டும்.
 • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • முட்டையை அடித்து வைத்துக்கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும்.
 • கடுகு நன்றாக பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கவும்.
 • பின்பு தக்காளியை போட்டு நன்றாக குழையும் வரை வதக்கவும்.
 • பின்பு மிளகு தூளை தவிர மற்ற அனைத்து தூள்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.
 • அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும் (நீர்க்க இருக்க கூடாது).
 • அடுப்பை சிம்மில் வைத்து தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும்.
 • அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும்.
 • பிறகு அதன் மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.
 • ஒரு நிமிடம் கழித்து தோசையை எடுத்தால் சுவையான மதுரை கறி தோசை ரெடி.
 • இதற்கு சைடிஸ்ஸாக எதையும் தொட்டுக்கொள்ள தேவையில்லை. காரசாரமாக அப்படியே சாப்பிடலாம்.

மதுரை கறி தோசை செய்வது எப்படி (kari dosai seivathu eppadi) என்று தெரிந்து கொண்டீர்களா சரி வீட்டில் செய்து அசத்துங்கள்…

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.