சுவையான ரவா குலாப் ஜாமுன் செய்முறை..!

ரவா ஜாமுன்

சுவையான ரவா குலாப் ஜாமுன் செய்முறை..!

எப்போதுமே நாம குலோப் ஜாமூன், ரசகுல்லா போன்றவற்றை தான் எந்த விசேஷமாக இருந்தாலும் செய்வோம். இப்போது ரவையை பயன்படுத்தி வித்தியாசமாக ரவா ஜாமுன் எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த வித்தியாசமான ரவா ஜாமுன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும், சரிவாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..!

செய்ய தேவையான பொருட்கள்:

  1. ரவா – 100 கிராம்
  2. பால் – 3 கப்
  3. நெய் – 2 டீஸ்பூன்
  4. தண்ணீர் – 1 1/2 கப்
  5. ஏலக்காய் – மூன்று
  6. குங்குமப்பூ – சிறிதளவு
  7. எலுமிச்சை பழம் – 1/2 பழம்
  8. எண்ணெய் – 1/2 லிட்டர்
  9. சர்க்கரை – 200 கிராம்
கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி ???

ரவா குலாப் ஜாமுன் செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைக்கவும்.

பாத்திரம் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும், பின்பு அவற்றில் ஒரு கப் ரவாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பின்பு அவற்றில் மூன்று கப் பால் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இந்த கலவையானது, நன்றாக கெட்டியாகும் பதத்திற்கு, நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அதாவது பால்கோவா பதத்திற்கு, நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.

கலவை கெட்டியானதும், அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியதும், நன்றாக பிசைந்து கொள்ளவும், பிறகு சிறு சிறு உருண்டையாக உருட்டி தனியாக வைத்து கொள்ளவும்.

இப்போது சர்க்கரை பாகு எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

200 கிராம் சர்க்கரை எடுத்து கொள்ளவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி கொள்ளவும்.

சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு, அவற்றில் மூன்று ஏலக்காயை இடித்து சேர்த்து கொள்ளவும், அதன்பிறகு சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து, அடுப்பில் இருந்து பாகை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

இப்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில், பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ளவும்.

பொறித்து வைத்துள்ள உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் போதும் சுவையான ரவா ஜாமுன் தயார்..!

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை விளக்கம்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!
SHARE