சுவையான வெஜிடபிள் பாஸ்தா சூப் செய்யலாம் வாங்க !!!

Advertisement

பாஸ்தா செய்வது எப்படி

சுவையான பாஸ்தா செய்முறை மற்றும் பாஸ்தா சூப் செய்முறை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

பாஸ்தா செய்முறை தேவையான பொருட்கள்

  1. பாஸ்தா – 100 கிராம்
  2. கேரட் – 25கிராம்
  3. பச்சைப் பட்டாணி – 25 கிராம்
  4. சின்ன வெங்காயம் – 25 கிராம்
  5. காலிபிளவர் – 2 இதழ்கள்
  6. தக்காளி – 25 கிராம்
  7. இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு
  8. வெள்ளைப் பூண்டு – 5 இதழ்கள் (மீடியம் சைஸ்)
  9. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
  10. கொத்த மல்லி இலை – 3 கொத்து
  11. மசாலா பொடி – ஸ்பூன்
  12. கரம் மசாலா பொடி – ¾ ஸ்பூன்
  13. உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு:

  1. நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
  2. கடுகு – ¼ ஸ்பூன்
  3. கறிவேப்பிலை – 3 கீற்று
  4. சீரகம் – ¼ ஸ்பூன்
இதையும் படிக்கவும் வாழைப்பழ கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!

பாஸ்தா செய்முறை விளக்கம்..!

பாஸ்தா செய்முறை step :1

முதலில் வாயகன்ற பாத்திரத்தில் பாஸ்தா மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் பாஸ்தாவைப் போட்டு வேகவிடவும்.

பாஸ்தா கையில் எடுத்து நசுக்கினால் நசுக்குப்படும் அளவிற்குவேகவைத்தால் போதுமானது.

பாஸ்தாவை வடிதட்டில் போட்டு நீரினை வடித்து தனியே வைத்துக் கொள்ளவும்.

பாஸ்தா செய்முறை step :2

பின் காரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக சதுரத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பட்டாணியை தோலுரித்து அலசி வைத்துக் கொள்ளவும்.

காலிபிளவரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூன்று நிமிடம் கழித்து வெளியே எடுத்து சிறுதுண்டுகளாக்கவும்.

தக்காளியை கழுவி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும்.

பூண்டு இதழ்களை தோலுரித்துக் கொள்ளவும்.

இரண்டு பூண்டு இதழ்களை இஞ்சியுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

மீதமுள்ள மூன்று பூண்டு இதழ்களை வில்லைகளாக வெட்டவும்.

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை அலசி காம்பு நீக்கி நேராகக் கீறிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

பாஸ்தா செய்முறை step :3

வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

பாஸ்தா செய்முறை step :4

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து இஞ்சி வெள்ளைப்பூண்டு விழுது, வெள்ளைப்பூண்டு வில்லைகள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

பாஸ்தா செய்முறை step :5

பின் அதனுடன் காரட், பச்சைப் பட்டாணி, காலிபிளவர், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் ஓரளவு வதங்கியபின் தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

பாஸ்தா செய்முறை step :6

பின் அதனுடன் சிறிதளவு நீர், மசாலா பொடி, கரம் மசாலா பொடி, தேவையானஉப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாடை மாறியதும் வேக வைத்து வடித்த பாஸ்தாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.

கலவை கெட்டியானதும் அடுப்பினை அணைத்து விடவும்.

பாஸ்தா செய்முறை step :7

பின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து ஒரு சேரக் கிளறிவிடவும்.

சுவையான பாஸ்தா தயார். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

சமையல் குறிப்பு :

பாஸ்தாவை குழைய வேகவிடக் கூடாது.

விருப்பமுள்ளவர்கள் முருங்கை பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்தும் பாஸ்தாவைத் தயார் செய்யலாம்.

இதையும் படிக்கவும் ஸ்பெஷல் சம்மர் சமையல் செய்யலாம் வாங்க..!

 



பாஸ்தா சூப் செய்யலாம் வாங்க:-

தேவையான பொருட்கள்:

  1. பாஸ்தா – 1/2 கப்
  2. வெஜிடபிள் 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்)
  3. கொண்டைக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன்
  4. பாஸ்தா சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்
  5. தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்
  6. உலர்ந்த கருவேப்பிலை இலை மற்றும் ஓரிகானோ – 1/4 டீஸ்பூன்
  7. உப்பு – தேவையான அளவு
  8. தண்ணீர் – 1/4 கப்
  9. சோள மாவு – 1 டீஸ்பூன்
  10. மிளகு தூள் – தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு:

  1. வெங்காயம் – 1/2
  2. பூண்டு – 3 பற்கள்
  3. ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்

பாஸ்தா செயல் முறை:

  • பாஸ்தா சூப் செய்வதற்கு முதலில் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • பின்பு வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
  • கேரட் மற்றும் பட்டாணியை குக்கரில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் விட்டு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அவற்றில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், தண்ணீர் நன்றாக கொதித்ததும், பாஸ்தா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  • பின்பு பாஸ்தா வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி அவற்றில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விடவும்.
  • பிறகு குளிர்ந்த நீரால் பாஸ்தாவை அலசி தனியாக வைத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின்பு அவற்றில் கேரட், கொண்டைக்கடலை மற்றும் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
  • பிறகு அவற்றில் பாஸ்தா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் ஓரிகானோ சேர்த்து கலவை ஒன்று சேரும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு அவற்றில் சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலவை நன்கு கொதிக்கும் போது பாஸ்தாவை சேர்க்க வேண்டும்.
  • பின்பு மிதமான சூட்டில் 5 நிமிடம் வரை பாஸ்தா வேக வேண்டும்.
  • பிறகு கரைத்து வைத்துள்ள சோள மாவை அவற்றில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • கலவையானது சூப் பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி அவற்றின் மேல் மிளகு தூளை தூவி விட வேண்டும்.
  • இதோ சுவையான பாஸ்தா சூப் தயார் இவற்றை அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.
இதையும் படிக்கவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை !!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement