கறிக்குழம்பு மாதிரியே சைவ கறி குழம்பு சூப்பரான சுவையில் | Saiva Kari Kulambu Recipe in Tamil

Advertisement

சைவ கறி குழம்பு | Saiva Kari Kulambu

புரட்டாசி மாதம் ஆரம்பித்து விட்டது என்றாலே கோழி, ஆடு, மீன்களுக்கு எல்லாம் கொண்டாட்டம் தான். ஏனெனில் பெரும்பாலான மக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அதனால் அசைவ பிரியர்கள் இந்த புரட்டாசி மாதத்தை வெறுக்கிறார்கள் என்றே சொல்லலாம். புரட்டாசி மாதத்தில் கஷ்டப்படும் அசைவ பிரியர்களுக்கு ஏற்ற வகையில் இந்த தொகுப்பில் கறிக்குழம்பு இல்லையென்றாலும் கரிக்குழம்பின் சுவையில் ஒரு சைவ கறி குழம்பை பார்ப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பச்சை பயிறு – தேவையான அளவு
  2. பட்டை – 3
  3. ஏலக்காய் – 2
  4. கிராம்பு – 4
  5. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  6. மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
  7. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  8. சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
  9. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  10. சிகப்பு மிளகாய் – 8
  11. சின்ன வெங்காயம் – 1 கப்
  12. நறுக்கிய தக்காளி – 2
  13. இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டேபிள் ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  15. தேங்காய் பால் – 1 கப்
  16. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

சைவ கறி குழம்பு

ஸ்டேப்: 1 

  • முதலில் பச்சை பயிரை கழுவி தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் பட்டை 3, ஏலக்காய் 2, கிராம்பு 4, மிளகு 1 டேபிள் ஸ்பூன், மல்லி 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், சோம்பு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து வறுத்து கொள்ளவும். வறுத்த பின்பு அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும்.

ஸ்டேப்: 2 

  • பின்னர் கடாயில் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், சிகப்பு மிளகாய் 8, சின்ன வெங்காயம் 1 கப் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொள்ளவும்.
  • பின்னர் நாம் வறுத்து வைத்திருப்பது மற்றும் வதக்கிய வெங்காயம், சிகப்பு மிளகாய் இவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3 

  • ஊறவைத்த பாசிப்பயிறை மிக்சியில் அரைத்து கொள்ளவும். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்த மசாலாவை 3 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

ஸ்டேப்: 4

  • பின்னர் இதை ஒரு டிபன்  பாக்ஸில் எண்ணெய் தடவி அதில் போடவும். இதை டபுள் பாய்லிங் முறையில் வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின் இதை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயில் பட்டை 3, ஏலக்காய் 2, கிராம்பு 4, சோம்பு அரை டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கி கொள்ளவும்.

ஸ்டேப்: 5

  • வதக்கிய பிறகு நறுக்கிய தக்காளி 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் அரை டேபிள் ஸ்பூன் மற்றும் மீதம் இருக்கும் அரைத்து வைத்த மசாலா, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

ஸ்டேப்: 6

  • குழம்பு கொதித்த பிறகு அதில் நாம் வேக வைத்த பச்சை பயிரை சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து சிறிதளவு கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான சைவ கறி குழம்பு தயார்.
சைவ பிரியர்கள் உங்களுக்காக சைவ மீன் குழம்பு அதுவும் நெத்திலி மீன் குழம்பு..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement