சோளா பூரி செய்முறை மற்றும் சன்னா மசாலா செய்முறை..!

chola poori

சோளா பூரி செய்வது எப்படி (chola poori)?

சோளா பூரி செய்வது எப்படி? மிகவும் சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சோளா பூரி செய்முறை (chola poori) பற்றி இப்போது நாம் காண்போம். இந்த சோளா பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் சோளா பூரி செய்முறை (chola poori) விளக்கங்கள் ஆகியவை கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை படித்து தங்கள் வீட்டில் சோளா பூரி (chola poori) செய்து அசத்துங்கள்.

சுவையான பன்னீர் டிக்கா செய்முறை..!

சோளா பூரி (chola poori) செய்ய தேவையான பொருட்கள்:

1. மைதா மாவு –250 கிராம்.
2. தயிர் –50 கிராம்.
3. உப்பு -தேவைகேற்ப.
4. எண்ணெய் -தேவைகேற்ப.

சோளா பூரி செய்முறை (chola poori):

பூரி செய்வது எப்படி? step: 1

சோளா பூரி (chola poori) செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் தயிர், ஆப்பசோடா மாவு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை பிசைய வேண்டும்.

பூரி செய்வது எப்படி? step: 2

பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

இரண்டு மணி நேரம் முடிந்த பிறகு அந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்ட வேண்டும்.

பூரி செய்வது எப்படி? step: 3

பின்பு பெரிய பூரியாக தேயித்து எடுக்க வேண்டும்.

அதன் பிறகு எண்ணெயில் இட்டு எடுக்க வேண்டும்.

சுவையான சோளா பூரி (chola poori) ரெடி.

இதற்கு தொட்டு கொள்ள சன்னா மசாலா நன்றாக இருக்கும்.

பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா ?

சன்னா மசாலா செய்வது எப்படி..! (channa masala in tamil)..!

பொதுவாக சன்னா மசாலா சப்பாத்தி, பூரி, சோளா பூரி (chola poori) போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அனைத்து ஹோட்டல்களிலும் சன்னா மசாலா கிடைக்கும். ஆனால், அதனை வீட்டில் எப்படி சுலபமாக சமைப்பது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

சன்னா மசாலா (channa masala in tamil) செய்ய தேவையான பொருட்கள்:

 1. கொண்ட கடலை – 200 கிராம்
 2. உப்பு – தேவையான அளவு
 3. எண்ணெய் – சிறிதளவு
 4. வெங்காயம் – 2
 5. இஞ்சி – 1 துண்டு
 6. பூண்டு – 4 பல்
 7. மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
 8. சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
 9. கரம் மசாலா – 1 டீஸ்பூன்
 10. மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
 11. மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
 12. தக்காளி – 2
 13. பட்டை – 1
 14. ஏலக்காய் –2
 15. கிராம்பு – சிறிதளவு
 16. பச்சைமிளகாய் – 2
 17. கொத்தமல்லி – சிறிதளவு
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!

சன்னா மசாலா செய்முறை (channa masala in tamil):

சன்னா மசாலா செய்ய (channa masala in tamil) முதலில் கொண்டைக்கடலையினை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 8 மணிநேரம் வரை ஊறவைக்கவும் . பிறகு ஊறிய கொண்ட கடலையினை ஒரு குக்கரில் போட்டு 4 முதல் 5 விசில் வரை விடவும்.

பிறகு மசாலா தயார் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு மற்றும் மேல் கூறிய அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து கிளறி பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கவும்.

வதக்கிய மசாலாவை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பச்சைமிளகாய் போட்டு தாளித்து அதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை கொட்டி 5 நிமிடம் வரை கொதிக்க விடவேண்டும்.

மசாலா நன்றாக கொதித்ததும் அதில் நாம் குக்கரில் வைத்த கொண்டைக்கடலையை எடுத்து கொட்டி 5 நிமிடம் வரை மூடி வைக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி எடுத்தால் சுவையான சன்னா மசாலா தயார்.

நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!