டேஸ்டான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி.?

Advertisement

Ennai Kathirikai Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே. இன்றைய சமையல் பதிவில் டேஸ்டான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, குழம்பு வகைகளில் அனைவர்க்கும் பிடித்த குழம்பு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. கத்தரிக்காய் பிடிக்காதவார்கள் கூற எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு என்றால் விரும்பி சாப்பிடுவர்ககள்.

கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கத்தரிக்காய் சாப்பிட மாட்டார்கள். எனவே, அப்படி இருக்கும் குழந்தைகளுக்கு சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்து கொடுங்கள். ஓகே வாருங்கள், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சுவையாக செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி.?

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

  1. கத்தரிக்காய் –1/4 கிலோ
  2. சின்ன வெங்காயம் – 15
  3. தக்காளி – 2
  4. தேங்காய் – அரை மூடி (சிறியது)
  5. பூண்டு – 10 பல்
  6. கடுகு – 1/2 தேக்கரண்டி
  7. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
  8. புளிக்குழம்பு பொடி – 4 தேக்கரண்டி
  9. புளி தண்ணீர் – 2 கப்
  10. நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை – 1 கொத்து
  12. உப்பு – தேவைக்கேற்ப

ஒரு முறை கத்தரிக்காய் சட்னி இப்படி செய்து பாருங்க..

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை:

  • தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
    பூண்டை தட்டி வைத்து கொள்ளவும், வெங்காயத்தை பாதியை மட்டும் இரண்டாக வெட்டிக் கொள்ளவும், கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
  • கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மைக்ரோஓவனில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும். (பாத்திரத்தில் கூட வதக்கி கொள்ளலாம்).
  • திரும்ப கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் போட்டு தாளிக்கவும். அடுத்து வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • அதன் பிறகு தட்டி வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கவும்.
  • அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும்.
  • அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • குழம்பு கொதித்ததும் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு கொதிக்க வைக்கவும்.
  • எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் குழம்பை இறக்கி வைக்கவும்.
  • டேஸ்டான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.

கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு பொருள் போதும்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9

 

Advertisement