யாரும் வீட்டில் இட்டிலிக்கு இந்த சட்னியை செய்ய மறக்காதிங்க..!

Advertisement

தக்காளி சட்னி செய்வது எப்படி?

பொதுவாக யாரும் வீட்டில் இந்த சட்னியை அதிகம் செய்தீருப்பீர்கள் ஆனால் இது செய்வது ஈசியாக இருக்கும் என்று சொல்லிவிட்டு அதனை சரியாக செய்ய மாட்டார்கள். இந்த சட்னியை மட்டும் சரியாக செய்துவிட்டால் சுவை சூப்பராக இருக்கும். அதேபோல் 4 இட்லி அதிகம் வயிற்றுக்குள் போகும். வாங்க இதுபோல் தக்காளி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டு காலை மாலை இதை செய்து அசத்துவோம்..!

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

 தக்காளி சட்னி செய்வது எப்படி

  1. பெரிய தக்காளி (நறுக்கியது) – 2
  2. பூண்டு – பற்கள்
  3. உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  4. எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  5. கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
  6. வெந்தயம் – ¼ டீஸ்பூன்
  7. காஷ்மீரி உலர்ந்த சிவப்பு மிளகாய் – 3
  8. மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
  9. சர்க்கரை – ½ டீஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு

தக்காளி சட்னி எப்படி செய்யணும்:

ஸ்டேப் -1

முதலில் கடாயயை அடுப்பில் வைத்து அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். இவை அனைத்தையும் மிதமான சூட்டில் வதக்கவும்.

ஸ்டேப் -2

அதனுடன் தக்காளி பூண்டு சிறிய தூண்டாக நறுக்கி அதில் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக வதங்கிய பின் அதில் மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும். பின்பு அது நன்றாக ஆரிய பின் அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.

ஸ்டேப் -3

இப்போது கடாயை சூடாக்கி, எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து கடைசியாக சட்னியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

அவ்வளவு தான் சுவையான தக்காளி சட்னி ரெடி

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு தேங்காய் இல்லாமல் இந்த மாதிரி சட்னி செய்து கொடுங்கள்

சுவையான பீர்க்கங்காய் சட்னி.! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அப்புறம் விடவே மாட்டீர்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement