தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?

biryani seivathu eppadi

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி???

Tandoori biryani recipe in tamil

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ???  (chicken biryani seivathu eppadi) பிரியாணி என்றாலே அசைவ பிரியர்களுக்கு பிடித்த மசாலா உணவு வகைகளுள் ஒன்று. எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று படித்தறிவோம் வாங்க..!

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்முறை..!

சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க தேவைப்படும் பொருட்கள்:

 1. தயிர் – ஒரு கப்
 2. பூண்டு – ஒன்று
 3. இஞ்சி – ஒரு துண்டு
 4. கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
 5. கறிவேப்பிலை – சிறிது
 6. பச்சைமிளகாய் – 2
 7. லவங்கம் – 4
 8. எலுமிச்சை – பாதி
 9. மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
 10. கரம் மசாலா – அரை தேக்கரண்டி
 11. மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
 12. சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
 13. கஸூரி மேத்தி – ஒரு தேக்கரண்டி
 14. உப்பு – தேவையான அளவு

மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க ..!

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி –
தேவையான பொருட்கள்:

 1. அரிசி – அரை கிலோ (ஊறவைக்கவும்)
 2. சிக்கன் லெக்பீஸ் – 4
 3. வெங்காயம் – 3
 4. தக்காளி – 3
 5. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
 6. மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
 7. கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
 8. புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

தாளிக்க தேவையான பொருட்கள்:

 • பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ – தலா 2

சரி வாங்க தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி (tandoori biryani recipe in tamil) என்று தெரிந்து கொள்வோம்.

வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ??? (Tandoori chicken biryani seivathu eppadi)

Tandoori biryani seivathu eppadi step: 1

தந்தூரி சிக்கன் பிரியாணி (Tandoori chicken biryani seivathu eppadi) செய்வதற்கு முதலில் சிக்கனுடன் சேர்த்து வேகவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

சிக்கனை சுத்தம் செய்தபின் அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

Tandoori biryani seivathu eppadi step: 2

சிக்கன் நன்றாக ஊறியதும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் சிக்கனை முக்கால் பதம் வேகும் வரை பொறித்து எடுக்கவும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

Tandoori biryani seivathu eppadi step: 3

வெங்காயம் நன்கு வதங்கியதும் புதினா, கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பச்சை வாசனை நீங்கியதும் மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூளை போட்டு நன்றாக கிளறிவிடவும்.

Tandoori biryani seivathu eppadi step: 4

அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்துள்ள அரிசியை அவற்றில் கலந்து எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

Tandoori biryani seivathu eppadi step: 5

உங்களது விருப்பத்துக்கேற்ப கலர் பொடி சேர்த்து கொள்ளலாம்.

குறிப்பாக 10 – 15 நிமிடம் தம்மில் போடவேண்டும்.

அரைமணி நேரம் கழித்து பாத்திரத்தை திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி ரெடி.

அன்புடன் அனைவருக்கும் பரிமாறலாம்.

ஹாய் பிரெண்ட்ஸ் தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி (Tandoori chicken biryani seivathu eppadi) என்று தெரிந்து கொண்டீர்களா… தங்களது வீட்டில் செய்து அசத்துங்கள் பிரெண்ட்ஸ்…

பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal