பாய் வீட்டு தால்சா செய்வது எப்படி?

Advertisement

பாய் வீட்டு தால்சா செய்வது எப்படி? | Dalcha Recipe in Tamil

ஹாய் நண்பர்களே.. பொதுவாக பாய் வீட்டு விசேஷங்களில் நெய் சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள இந்த தால்ச்சா வைப்பார்கள். சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். வெள்ளை சாதத்தில் இந்த தால்சா போட்டு கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால், அட்டகாசமான சுவையில் இருக்கும். சூப்பரான தால்சா ரெசிபி சுவையாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பாய் வீட்டு தால்ச்சா செய்வது எப்படி? | Thalicha Kulambu in Tamil

தேவையான பொருட்கள்:

  1. துவரம் பருப்பு – 1 டம்ளர்
  2. கடலைப்பருப்பு – 1/2 டம்ளர்
  3. சின்ன வெங்காயம் – 10 முதல் 15
  4. வரைதக்காளி 4
  5. கத்தரிக்காய் – 4 முதல் 5
  6. மட்டன் – 1/4 கிலோ (எலும்புடன் சேர்ந்த கறி மற்றும் கொழுப்புத்துண்டுகள்)செள செள: அரைக்காய் (கியூப்களாக அரிந்தது)
  7. மாங்காய் – சின்னது 1 (நீளவாக்கில் அரிந்து இரண்டாகப் பிளந்து கொள்ளுங்கள்)
  8. முருங்கைக்காய் – 2
  9. இஞ்சி – 1 பெரிய துண்டு
  10. பூண்டு – 10 பல்
  11. பச்சை மிளகாய் – 4
  12. கொத்துமல்லித் தழை – ஒருகைப்பிடி
  13. மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்
  14. மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  15. சமையல் எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

கத்தரிக்காய் தால்ச்சா செய்வது எப்படி? (Kathirikai Thalicha in Tamil) – செய்முறை இதோ..

ஸ்டேப்: 1

பருப்புகள் இரண்டையும் நன்கு கழுவி அரைமணி நேரம் ஊற வைத்த பின் குக்கரில் சேர்க்கவும் அத்துடன் 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.

ஸ்டேப்: 2

பிறகு அதை இறக்கி விட்டு மீண்டும் வேறொரு வாணலியில் நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், நீளவாக்கில் நறுக்கிய 4 பச்சைமிளகாய், நீளவாக்கில் நறுக்கிய மாங்காய், செள செள மற்றும் நீளவாக்கில் நறுக்கிய மூன்று தக்காளிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

ஸ்டேப்: 3

தால்ச்சாவைப் பொருத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு எண்ணெய் சேர்த்து நன்கு வதக்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சுவை கூடும் என்பார்கள்.

ஸ்டேப்: 4

சரி காய்கறிகள் குழைந்து விடாமல் நன்கு வதங்கியதும் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விடவும். மறந்தும் இதில் தண்ணீர் விட்டு விடாதீர்கள். முழுவதும் எண்ணெயில் தான் வதங்க வேண்டும்.

ஸ்டேப்: 5

காய்கறிகள் நன்கு வெந்ததும் அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு ஒரு கோலிக்குண்டு அளவு புளியை ஊற வைத்துக் கரைத்தெடுத்த நீரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

ஸ்டேப்: 6

காய்கறிகள் 90% வெந்த பின்னரே புளி சேர்க்க வேண்டும். புளி சேர்த்ததும் ஒருமுறை நன்கு கிளறி விட்டு அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து வேக விடவும்.

இத்துடன் முதலில் தனியாக நான்கைந்து விசில் விட்டு வேக வைத்து எடுத்த மட்டன் எலும்பு மற்றும் கொழுப்புக்கறித்துண்டுகளை இத்துடன் சேர்க்கவும்.

ஸ்டேப்: 7

மட்டன் எலும்பை வேக வைத்து இதில் சேர்த்த பின்னரே தால்ச்சா நிறைவுறும்.கடைசியாக தால்ச்சாவுக்கு தாளித்துக் கொட்ட வேண்டும். அதில் இருக்கிறது இதன் ஸ்ஃபெஷல் ஃபிளேவர்,

ஸ்டேப்: 8

ஒரு கல் சட்டியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் வெந்தயம் போட்டு அது வெடித்து வரும்போது நீளவாக்கில் நறுக்கி வைத்த ஒரு பெரிய வெங்காயம் கறிவேப்பிலையும் போட்டி நன்கு வதக்கி கறிவேப்பிலை மொறுமொறுவென பொரிந்த பக்குவத்தில் அதை எடுத்து நாம் தயாரித்து வைத்திருக்கும் தால்ச்சாவில் சேர்க்கவும்.

இப்போது ருசியான பாய்வீட்டு தால்ச்சா ரெடி. பிரியாணியுடன் மட்டுமல்ல இது நெய்சோறு, ஜீரக சாதம், பிளைன் பிரியாணி, காய்கறி சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவதற்கு அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

ரம்ஜான் ஸ்பெஷல் 1kg மட்டன் பிரியாணி செய்முறை..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement