தேங்காயை வைத்து மூன்று விதமான சமையல் செய்முறை விளக்கம்..!
Thengai cake seivathu eppadi in tamil: இன்று சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து மூன்று விதமான சமையல் செய்முறை விளக்கம் பற்றித்தான் பார்க்க போகிறோம். என்னென்ன ரெசிபி அப்படினு பார்த்தோம் என்றால் தேங்காய் கேக் செய்வது எப்படி?, தேங்காய் பர்பி செய்வது எப்படி?, தேங்காய் போளி செய்வது எப்படி? ஆகிய மூன்று சமையல் செய்முறை விளக்கம் பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த மூன்று ரெசிபியும் மிகவும் சுவையுள்ளதாகவும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக இருப்பதால் உடனே படித்து செய்து அசத்திடுவோம் வாங்க..!
இந்த சமையல் செய்முறை விளக்கம் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க –> | வித்தியாசமான ருசியில் மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்முறை |
1. தேங்காய் பர்பி செய்வது எப்படி? – சமையல் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :
1. துருவிய தேங்காய் – 1 கப்
2. சர்க்கரை – 3/4 கப்
3. பால் அல்லது தண்ணீர் – 1/4 கப்
4. ஏலக்காய் தூள் – சிறிது
5. நெய் – 1 அல்லது 2 மேஜைக்கரண்டி
தேங்காய் பர்பி செய்முறை:-
தேங்காய் பர்பி செய்முறை விளக்கம் :1
சமையல் செய்முறை விளக்கம் – தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். டிரேயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி எல்லா இடங்களிலும் படும்படி தடவி வைக்கவும்.
தேங்காய் பர்பி செய்முறை விளக்கம் :2
அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து தேங்காய் துருவல், சர்க்கரை, பால் அல்லது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து கிளற ஆரம்பிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வற்ற ஆரம்பிக்கும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பிடித்தால் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
தேங்காய் பர்பி செய்முறை விளக்கம் :3
இப்போது ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வற்றி சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
தேங்காய் பர்பி செய்முறை விளக்கம் :4
நெய் தடவிய டிரேயில் பரப்பி விடவும். நன்றாக ஒரு தோசை கரண்டியை வைத்து அழுத்தி பரப்பி கொள்ளுங்கள்.
தேங்காய் பர்பி செய்முறை விளக்கம் :5
சிறிது நேரம் கழித்து பர்பி லேசான சூட்டில் இருக்கும் போது ஒரு கத்தியை வைத்து துண்டுகளாக கட் செய்து கொள்ளுங்கள். சுவையான தேங்காய் பர்பி ரெடி.
சமையல் குறிப்பு டிப்ஸ் (Samayal kurippu tamil):-
முந்திரிப்பருப்பு சேர்க்க விரும்பினால், ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து பர்பியில் ஏலக்காய் தூள் சேர்க்கும் போது அதையும் சேர்த்துக் கொள்ளவும்.
2. தேங்காய் கேக் செய்வது எப்படி? – சமையல் செய்முறை விளக்கம்
தேங்காய் கேக் செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – 2 கப்
- தேங்காய் துருவல் – 1 1/2 கப்
- சர்க்கரை – 1 1/2 கப்
- பால் – 1 கப்
- முட்டை (உடைத்து நன்றாக அடித்து கொள்ளவும்) – 3 கப்
- பட்டர் – 1 கப்
- உப்பு – 1 சிட்டிகை
- வென்னிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
- வெண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் கேக் செய்முறை
தேங்காய் கேக் செய்முறை விளக்கம் :1
சமையல் செய்முறை விளக்கம் – ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அவற்றில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
தேங்காய் கேக் செய்முறை விளக்கம் :2
பின்பு அவற்றில் வெண்ணெய் கலந்து வைத்துக்கொண்டு, முட்டை, பால், வென்னிலா எஸன்ஸ் ஆகியவற்றை கலந்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் இந்த மைதா மாவு கலவையில் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.
தேங்காய் கேக் செய்முறை விளக்கம் :3
பின்பு பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி 40 நிமிடம் ஓவனில் வேக வைக்கவும். பின்பு அவற்றில் சிறிதளவு தேங்காய் துருவலை துவினால் போதும் சுவையான தேங்காய் கேக் தயார்.
இந்த சமையல் செய்முறை விளக்கம் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க –> | வாழைப்பழ கேக் செய்யலாம் !!! |
3. தேங்காய் போளி செய்வது எப்படி ? – சமையல் செய்முறை விளக்கம்
தேங்காய் போளி செய்முறை – தேவையான பொருட்கள்:
- தேங்காய்த்துருவல் – 1 கப்
- வெல்லம் பொடித்தது – 1 கப்
- சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
- நெய் – சுவைக்கு
- நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன் வரை
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – 1/2 டீஸ்பூன்
தேங்காய் போளி செய்முறை:-
தேங்காய் போளி செய்முறை விளக்கம்:1
சமையல் செய்முறை விளக்கம் – கோதுமை அல்லது மைதா மாவை ஒரு கப் எடுத்து கொள்ளவும், அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு, சிறிதளவு நெய் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு பிசைந்த மாவின் மேல் சிறிதளவு நல்லெண்ணெய்யை தடவி குறைந்தது 1/2 மணி நேரம் வரை மாவை மூடி வைக்கவும்.
தேங்காய் போளி செய்முறை விளக்கம்:2
வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
தேங்காய் போளி செய்முறை விளக்கம்:3
வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி (பூர்ணம் வெளியில் வரக்கூடாது), தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.
சுவையான தேங்காய் போளி ரெடி
சமையல் குறிப்பு டிப்ஸ் kurippu tamil :
சாதாரணமாக தேங்காய் போளி மைதா மாவில் தான் செய்வார்கள். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.
இதே போன்று, கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து, பருப்பு போளியும் செய்யலாம். கைகளால் தட்ட சிரமமாயிருந்தால், சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி இடுவது போல் இடலாம். மாவின் மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை போட்டு அதன் மேல் சப்பாத்திக்கட்டையால் உருட்டினால் ஒட்டாமல் வரும்.
நெய்யுடன் இந்த தேங்காய் போளியை தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த சமையல் செய்முறை விளக்கம் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க –> | ஈஸியா பப்ஸ் செய்யலாம் வாங்க !!! |