காலிஃபிளவர் வடை செய்முறை (cauliflower recipes in tamil) விளக்கம்..!
அனைவருக்குமே காலிஃபிளவர் (cauliflower recipes in tamil) என்றாலே மிகவும் பிடிக்கும். காலிஃபிளவரை அதிகமாக பக்கோடா போட்டுத்தான் (cauliflower pakoda) சாப்பிடுவோம். அது மிகவும் சுவையாக இருக்கும். இருப்பினும் இந்த காலிஃபிளவரில் வித்தியாசமாக, வடை செய்வது எப்படி என்று இப்போது நாம் காண்போம்.
இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!
காலிஃபிளவர் வடை செய்ய தேவையான பொருட்கள் (cauliflower recipes in tamil):
1.பொடிதாக நறுக்கிய வேகவைத்த காலிஃபிளவர் – அரை கப்
2. கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
3. கசகசா – கால் டீஸ்பூன்
4. கொத்தமல்லி – சிறிதளவு
5. உப்பு – தேவைகேற்ப
6. மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
7. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
காலிஃபிளவர் வடை செய்முறை (cauliflower recipes in tamil):
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு முறை கொதி வந்ததும், அதனை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, மிளகாய் தூள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியான பதத்தில் பிசைய வேண்டும்.
- பிறகு சிறு சிறு உருண்டையாக எடுத்து வடை போல் தட்டவும்.
- பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான காலிஃபிளவர் வடை (cauliflower recipes in tamil) ரெடி.
வித்தியாசமான கற்றாழை பருப்பு பாயசம்..!
காலிஃபிளவர் பயன்கள் (cauliflower benefits):
நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் (cauliflower benefits) ஆகும்.
இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில் அதிக அளவு ஆற்றல் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறுக்கு வெட்டு காய்கறிகளில் காலிஃபிளவரில் (cauliflower benefits) தான் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. மேலும் ஒரு கப் காலிஃபிளவரில் 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.
எனவே இதனை தினமும் நாம் உணவாக எடுத்து கொண்டால் நம் உடல் அதிக ஆற்றல் பெற்றதாக திகழும் என்பதில் எவ்வித ஐயம் இல்லை.
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.