நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி ? Easy Chicken Kulambu in Tamil..!

easy chicken kulambu in tamil

நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி ? Easy Chicken Kulambu in Tamil..!

Nattu koli kulampu seimurai vilakkam in tamil: அசைவ உணவில் கோழி குழம்பு (chicken kulambu) முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது கோழியே. பிராய்லர் கோழி இல்லீங்க. நாட்டுக்கோழி குழம்பு (chicken curry in tamil) தான்.

பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. நாட்டுக் கோழியை சமைப்பதற்கு முன்பு நானும் அப்படித்தான் நினைத்தேன். சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக் கோழியே.

நாட்டுக்கோழி வாங்கும் போது கிலோ கிராம் அல்லது அதற்குக் குறைவான எடையுள்ள கோழியைத் தேர்ந்தெடுத்து வாங்கினால் சக்கை போல் இராது. ஒரு தடவை நாட்டுக்கோழி குழம்பு (chicken curry in tamil) செய்து பாருங்கள் அதன் ருசியே தனி.

ரோட்டுக்கடை சிக்கன் ரைஸ் செய்வது எப்படி? Chicken fried rice..!

இனி சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி? (chicken curry in tamil) என்று பார்ப்போம்.

நாட்டுக்கோழி குழம்பு (Chicken Curry In Tamil) செய்ய தேவைப்படும் பொருட்கள்:

 1. நாட்டுக்கோழி 1 – கிலோ
 2. வெங்காயம் – 3
 3. தக்காளி – 2
 4. இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
 5. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
 6. பச்சை மிளகாய் 3-4
 7. மல்லி (தனியா) – 2 டேபிள் ஸ்பூன்
 8. சீரகம் ½ டேபிள் ஸ்பூன்
 9. தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
 10. பூண்டு – 3 பல்
 11. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 12. மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
 13. கரம் மசாலா – ½ டீஸ்பூன்
 14. உப்பு – தேவையாள அளவு
 15. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
 16. கொத்தமல்லி – சிறிதளவு
 17. தண்ணீர் – சிறிதளவு

நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி ? Easy Chicken Kulambu in Tamil..!

நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி / Easy Chicken Kulambu in Tamil STEP: 1

முதலில் நாட்டுக்கோழி குழம்பு (chicken kulambu) செய்ய கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி கொள்ளவும்.

நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி / Easy Chicken Kulambu in Tamil STEP: 2

மல்லி, சீரகம், தேங்காய் மற்றும் பூண்டு ஆகியவற்றை கடாயில் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும் வதக்கியவை ஆறியதும் மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

சிக்கன் புலாவ் சுவையான சமையல் செய்முறை..!

நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி / Easy Chicken Kulambu in Tamil STEP: 3

பின்பு அவற்றில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

அதன் பிறகு தக்காளியை வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த பேஸ்ட், கரம் மசாலா, உப்பு மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி / Easy Chicken Kulambu in Tamil STEP: 4

அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மசாலா சிக்கனில் படும்மாறு நன்றாக பிரட்டி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 20 நிமிடம் வரை சிக்கனை வேகவைக்க வேண்டும்.

நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி / Easy Chicken Kulambu in Tamil STEP: 5

சிக்கன் நன்றாக வெந்ததும் இறக்கி குழம்பின் (chicken kulambu) மேல் கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான நாட்டுக்கோழி குழம்பு (chicken curry in tamil) ரெடி.

இந்த சுவையான நாட்டுக்கோழி குழம்பை (chicken kulambu) சூடான சாதத்திற்கு, தோசை, இட்லி மற்றும் சப்பாத்தி என்ற அனைத்து உணவுகளுக்கும் சுவையாக இருக்கும்.

சுவையான சிக்கன் பரோட்டா செய்முறை..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal in tamil