ஹோட்டல் ஸ்டைல் நூல் பரோட்டா செய்வது எப்படி? | Nool Parotta Recipe in Tamil

Advertisement

நூல் பரோட்டா செய்வது எப்படி? | Nool Parotta in Tamil 

பரோட்டா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பொருள். பரோட்டாவில் கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, வீச் பரோட்டா, சில்லி பரோட்டா, கோதுமை பரோட்டா, பன் பரோட்டா, நூல் பரோட்டா என்று பல வகைகள் உள்ளது. ஒவ்வொன்றுமே தனித்தனி ருசியை கொண்டுள்ளது என்றே சொல்லலாம். இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் ஹோட்டல் ஸ்டைலில் எப்படி? ருசியான நூல் பரோட்டா செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் – Thread Parotta Recipe in Tamil at Home

  1. மைதா மாவு – 2 (1/4) கப்
  2. உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  3. நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  4. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  5. முட்டை – 1 (அடித்தது)
  6. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை – Thread Parotta Recipe in Tamil:

ஸ்டேப்: 1

ஒரு பாத்திரத்தில் 2 (1/4) கப் மைதா மாவு எடுத்து கொள்ளவும், பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் நெய் (நெய்க்கு பதிலாக எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்) சேர்த்து நன்றாக கலக்கவும்.

ஸ்டேப்: 2

பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 முட்டை (அடித்தது) சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மாவை பிசைந்து கொள்ளவும் (சப்பாத்தி மாவு பிசைவது போல்).

ஸ்டேப்: 3

மாவை பிசைந்த பிறகு அதில் சிறிதளவு எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 1 மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஸ்டேப்: 4

பின் சப்பாத்தி கல்லில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். மைதா மாவை மெல்லியதாக தேய்த்து கொள்ளவும். அதன் பிறகு தேய்த்து வைத்திருக்கும் மைதா மாவை கத்தி வைத்து மெல்லிய கோடுகளாக கட் பண்ணவும்.

ஸ்டேப்: 5

பின் அதன் மேல் லேசாக மைதா மாவை தூவி கொள்ளுங்கள் அப்போது தான் கட் செய்த துண்டுகள் ஒட்டாமல் வரும். பின்னர் அனைத்து துண்டுகளையும் பொறுமையாக ஒன்னாக சேர்த்து உருட்டிக் (Roll) கொள்ளவும்.

ஸ்டேப்: 6

அதன் மேல் எண்ணெய் தடவி கையை வைத்து வட்ட வடிவில் பரப்பவும். பின் இதை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பக்கமாக திருப்பி போட்டு வேக வைக்கவும்.

பரோட்டா வெந்தவுடன் சூடாக இருக்கும் போதே இரண்டு பக்கமும் கையால் தட்டிவிட்டால் சுவையான நூல் பரோட்டா தயார்.

ஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி
சுவையான சிக்கன் பரோட்டா செய்முறை

 

இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு 
Advertisement