பாய் வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி? | Nei Sadam Seivathu Eppadi
நெய் சாதம் என்று சொன்னாலே பிடிக்காது என்று யாருமே சொல்லமாட்டார்கள். அதிலும் பாய் வீட்டு கல்யாண நெய் சோறு என்றால் சொல்லவா வேணும். வேணும் வேணான்னு அனைவரும் சாப்பிடுவார்கள். வீட்டில் நாமும் நெய் சாதம் செய்திருப்போம், ஆனால் அப்படி என்னதான் பாய் வீட்டில் செய்யும் நெய் சோறில் மட்டும் டேஸ்ட் இருக்கிறது என்று தெரியலையே.. பாய் வீட்டில் செய்யும் டேஸ்டிற்கு நீங்களும் நெய் சாதம் செய்து அசத்தலாம். இந்த பதிவில் அந்த டிப்ஸை தான் பார்க்க போகிறோம்.
ருசியான கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி? |
நெய் சாதம் செய்ய – தேவையான பொருள்:
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- லவங்கம் – 6
- பட்டை – 2 பீஸ்
- ஏலக்காய் – 4
- அன்னாசி பூ – 2
- கடல்பாசி – 1
- பிரியாணி இலை – 2
- முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
- பெரிய வெங்காயம் – 3 (நீளவாக்கில் நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 5 (காரத்திற்கு ஏற்ப)
- பாசுமதி அரிசி – 2 கப் (ஊறவைத்தது)
- தண்ணீர் – 4 கப்
- புதினா (அ) கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
பாய் வீட்டு நெய் சாதம் – செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
பாய் வீட்டு ஸ்டைலில் நெய் சாதம் செய்ய முதலில் ஒரு அகலமான குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றிக்கொள்ளவும். நெய்க்கு பதிலாக எண்ணெய் கலந்தும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஸ்டேப்: 2
நெய் நன்றாக சூடானதும் அதனுடன் லவங்கம், பட்டை, ஏலக்காய், அன்னாசி பூ, கடல்பாசி, பிரியாணி இலை, 1 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பினை சேர்த்து நெய்யுடன் கரண்டியால் வதக்கிவிடவும். மிதமான அளவிற்கு வதக்கிவிட்டால் போதுமானது.
ஸ்டேப்: 3
இப்போது மிதமான அளவிற்கு வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கவும்.
சத்தான சுவையான எள்ளு சாதம் செய்வது எப்படி |
ஸ்டேப்: 4
மிதமான அளவிற்கு வெங்காயம் வதங்கியதும் ரெடி செய்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கிவிடவும்.
ஸ்டேப்: 5
பச்சை வாடை போகும் வரை வதக்கியதும் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசி 2 கப், உப்பு தேவையான அளவு சாதத்தின் மீது தூவி 5 நிமிடம் வரை நெய்யில் சாதத்தை மிதமான சூட்டில் கிண்டிவிடவும்.
ஸ்டேப்: 6
அடுத்ததாக 2 கப் சாதத்திற்கு 4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா இலைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அருமையான சுவையில் தேங்காய் பால் சாதம் ரெசிபி |
ஸ்டேப்: 7
இப்போது ஒருமுறை கிண்டி விடவும். உப்பு காரம் சரியாக உள்ளதா என்று பார்த்துகொள்ளவும்.
ஸ்டேப்: 8
அடுத்து மிதமான சூட்டில் அடுப்பை வைத்து குக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும். (நார்மல் குக்கர் என்றால் 2 விசில் வைக்கவும்). கிளிப்பான் குக்கர் என்றால் 1 விசில் போதுமானது.
ஸ்டேப்: 9
ஒரு விசில் வந்ததும் குக்கரின் மூடியை ஓபன் செய்து சாதம் உடைந்து போகாமல் ஒருமுறை கிளறவும். வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு சாப்பிடக்கூடிய சூப்பரான நெய் சாதம் ரெடியாகிட்டு.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |