பண்டிகை ஸ்பெஷல் – பாதாம் பூரி ரெசிபி..!

Advertisement

பாதாம் பூரி செய்முறை (Badam Puri Recipe In Tamil)..!

உங்கள் வீட்டில் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் இனிப்பு கொண்டாட்டமும் இடம் பெறும். தித்திக்கும் இனிப்பு சுவை நாக்கில் ததும்ப சுவை அரும்புகள் மலர, எல்லாருக்கும் விருப்பமான ஸ்வீட் தான் இந்த பாதாம் பூரி ரெசிபி (badam puri recipe in tamil).

அப்படியே மொறு மொறுப்பான பூரியுடன் அதன் மேல் அப்படியே சர்க்கரை பாகுவில் நனைத்து சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான். குழந்தைகளுக்கு விருப்பமான டிஸ்ஸூம் இது தான்.

இந்த பாதாம் பூரி (badam puri recipe in tamil) இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இதில் விருப்பமான விஷயம் என்னவென்றால் இந்த பூரியை செய்ய பாதாம் தேவையில்லை என்பது தான். நாங்கள் பாதாம் இல்லாத பூரியை செய்து உங்கள் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்க போகிறோம்.

நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி ?

சரி இப்போது பாதாம் பூரி ரெசிபி (badam puri recipe in tamil) எப்படி செய்ய வேண்டும் என்று இப்போது நாம் காண்போம்.

பாதாம் பூரி (Badam Puri Recipe In Tamil) – தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 1 கப்
  2. சர்க்கரை – 3/4 கப்
  3. உருக்கிய நெய் – 1/4 கப்
  4. உலர்ந்த தேங்காய் துருவல் – 1/2 கப்
  5. எண்ணெய் – பொரிப்பதற்கு
  6. அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  7. தண்ணீர் – 1 கப்
  8. உப்பு – சுவைக்கேற்ப
  9. ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  10. கிராம்பு – 8-10

ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்..!

பாதாம் பூரி செய்முறை (Badam Puri Recipe In Tamil):

  • பாதாம் பூரி (badam puri recipe in tamil) செய்ய முதலில் ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள்.
  • அதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்.
  • ஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும் நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.
  • அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை பாகை இறக்கி தனியாக வைக்கவும்.
  • இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்.
  • பிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். அதாவது (சமோசா செய்வது மாதிரி)
  • இப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியை பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.
  • இந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து துருவிய தேங்காயை அதன் மேல் தூவினால் சுவையான பாதாம் பூரி (badam puri recipe in tamil) ரெடி. அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

குறிப்பு:

  • சர்க்கரை பாகினை சரியான பதத்தில் காய்ச்ச வேண்டும்.
  • சர்க்கரை பாகு ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சரியான பதத்திற்கு கொண்டு வந்து கொள்ளுங்கள்.

ரொம்ப டேஸ்ட்டான கோதுமை ஸ்வீட்..! அப்பறம் குலாப் ஜாமுனை மறந்துடுவீங்க..!

 

 

Advertisement