மீதமாகிய சாதத்தில் கட்லட் செய்யலாமா?

Advertisement

மீதமாகிய சாதத்தில் கட்லட் செய்யலாமா?

சமைச்ச சாதம் மீதம் இருந்தால் அதை வீணாக்காமல் சாதத்தில் (Kitchen Tips In Tamil) கட்லட் செய்யலாம். சரி கட்லட் எப்படி செய்வது என்று நாம் இங்கு காண்போம்.

கொலஸ்ட்ரால் குறைய டேஸ்டான கொள்ளு ரசம்..!

தேவையான பொருட்கள்:

  1. வேகவைத்த சாதம் – 1 கப்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு – 1
  3. காய்கறிகள் (பிடித்த 4 அல்லது 5 காய்கறிகள்) – 1கப் (நறுக்கியது)
  4. பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
  5. இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  6. பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
  7. மிளகாய் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
  8. கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  9. உப்பு – தேவைக்கேற்ப
  10. மஞ்சள் தூள் – கொஞ்சம்
  11. சீரகப் பொடி-1/2 டேபிள் ஸ்பூன்
  12. தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  13. மக்காச் சோள மாவு-1 டேபிள் ஸ்பூன்
  14. கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
  15. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

சமையல் செய்முறை 1:

  • எண்ணெய் தவிர மேலே கொடுக்கப்பட்ட அனைத்தையும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். சாதம் மையும் அளவிற்கு பிசைந்து இருக்க வேண்டும்.
  • வறுத்த பொரி கடலை மாவு அல்லது பேசன் மாவு உபயோகிக்கலாம் அதை ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.
  • நாம் ஏற்கனவே பிசைந்து வைத்த மாவை நன்கு தட்டையாக தட்டி கொள்ள வேண்டும் அதாவது கட்லட் வடிவத்தில் தட்டியிருக்க வேண்டும்.

சமையல் செய்முறை 2:

  • அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
  • எண்ணெய் காய்ந்த உடனே உருட்டி வைத்துள்ள கட்லட்யை ஒவ்வொன்றாக கடாயில் போட்டு பொரிக்க வேண்டும்.
  • பொன்நிறமாகும் வரை பொரிக்க வேண்டும், திருப்பி கொண்டே இருக்க வேண்டும் இல்லையேல் கருகி போய்விடும்.
  • நன்கு பொரிந்த பிறகு ஈரப்பதம் இல்லாத தட்டில் வைக்கவும்.

அம்புட்டுதா சுவையான ரைஸ் கட்லட் ரெடி, இதற்கு சாஸ் அல்லது புதினா, காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் குளிருக்கு எத்தனை நாம் சாப்பிடுவோம் என்றே தெரியாது. அப்படியே இலகுவாகவும் மிதமாகவும் ருசியாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் டிரை செய்து பாருங்கள்.

பண்டிகை ஸ்பெஷல் – பாதாம் பூரி ரெசிபி..!

சமையல் அறை குறிப்புகள் (Kitchen Tips In Tamil):

சமையல் குறிப்பு டிப்ஸ் (Kitchen Tips In Tamil)1:

ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

சமையல் குறிப்பு டிப்ஸ் (Kitchen Tips In Tamil) 2:

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

சமையல் குறிப்பு டிப்ஸ் (Kitchen Tips In Tamil)3:

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

சமையல் குறிப்பு டிப்ஸ் (Kitchen Tips In Tamil) 4:

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

சமையல் குறிப்பு டிப்ஸ் (Kitchen Tips In Tamil) 5:

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

சமையல் குறிப்பு டிப்ஸ் (Kitchen Tips In Tamil)6:

தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலே ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.

நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி ?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement