முருங்கை கீரை தண்ணி சாறு | Murungai Ilai Saru
வணக்கம் நண்பர்களே இன்று நாம் சமையல் குறிப்பில் முருங்கை சாறு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம். பொதுவாக கீரை வகை என்றால் சத்துகள் அதிகம் உள்ள ஒரு பொருள். அதுவும் முருங்கை கீரைக்கு என்று தனி தன்மை உள்ளது. இதில் இரும்பு சத்துகள் அதிகம், அதனால் பிள்ளைகளுக்கு அதில் சாம்பார், பொரியல் என செய்து கொடுத்து இருப்பீர்கள். இனி இந்த மாதிரியான முருங்கை சாறு செய்து கொடுங்கள். வாங்க முருங்கை சாறு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முருங்கைகீரை- அரை கட்டு
- வெந்தயம் -1 ஸ்பூன்
- சீரகம் -1/2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் -3
- சின்ன வெங்காயம் – 20
- தக்காளி -1
- மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
- தேங்காய் பால் 1/2 மூடி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
முருங்கை கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி? |
முருங்கை கீரை சூப் செய்யும் முறை:
ஸ்டேப்: 1
- முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், சீரகம் போடவும்.
ஸ்டேப்: 2
- பொரிந்த பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பச்சை தன்மை போகும் வரை வதக்கவும்.
ஸ்டேப்: 3
- வெங்காயம் வதங்கிய பின் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். பச்சை வாடை போன பிறகு அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் போடவும்.
ஸ்டேப்: 4
- மஞ்சள் தூள் போட்ட பிறகு ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
ஸ்டேப்: 5
- பத்து நிமிடம் கொதித்த பிறகு அதில் உருவி வைத்த முருங்கைகீரை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துகொள்ளவும்.
ஹோட்டல் சுவையில் சாம்பார் செய்வது எப்படி? |
ஸ்டேப்: 6
- முருங்கைகீரை சேர்த்து கொதித்த பிறகு கடைசியாக தேங்காய்பால் சேர்த்துகொள்ளவும், கொதிக்கவிடாமல் சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
- வெயில் காலங்களில் சாப்பிடும் சுவையான முருங்கைகீரை சாறு ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |