சுவையான மோர் குழம்பு செய்முறை..!
பெண்களுக்கு மிகவும் முக்கியமான உணவாக தயிர் விளங்குகிறது. பிரசவத்தின் போது நல்ல உடல் நலத்துடன் இருந்து, எளிதாக பிரசவமாகவும்,
தாய்ப்பால் உற்பத்தியாகி குழந்தைக்கு நன்கு பால் கிடைக்கவும், தயிரில் உள்ள கால்சியல் மிகவும் உதவுகிறது.
எனவே தினமும் இரண்டு வேலையாவது தயிர் சாப்பிடுவது மிகவும் நல்லது.
தினமும் இரண்டு அல்லது மூன்று வேலை தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.,
சரிவாங்க இப்போது இவற்றில் தயிரை வைத்து சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி என்று நாம் காண்போம்.
தேவையான பொருட்கள்:
- தயிர் – 2 கப்
- வெள்ளரிக்காய் (அ) கேரட் – 1 கப் ( நறுக்கியது )
- சீரகம் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
- துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 100கி ( நறுக்கியது )
- தக்காளி – 2 ( நறுக்கியது )
- பச்சை மிளகாய்- 2
- வரமிளகாய் – 3
- பெருங்காயம் – சிறிதளவு
- தேங்காய் துருவல் – 1/2 மூடி
- இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
- பூண்டு – 6 பல்
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி தழை – தேவையான அளவு
- கடுகு, உளுந்தம் பருப்பு – தாளிக்க
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் தயிரில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்.
- பின்பு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- துவரம்பருப்பை ஊறவைத்து நொறு நொறுப்பாக அரைத்து கொள்ளவும்.
- பின்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்தப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் (அ) கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்பு அரைத்து வைத்துள்ள கலவையை அவற்றில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- கொதிக்கும் கலவையில் கடைந்த தயிரையும் அரைத்த துவரம் பருப்பையும் சேர்த்து கலக்கி ஒரு கொதி வருவதற்க்குள் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
- மீண்டும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து மோர் குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவினால் சுவையான மோர் குழம்பு தயார்.
- அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.