புட்டு வகைகள் செய்முறை (Puttu recipe in tamil)
புட்டு செய்முறை: இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும்.
சரி வாங்க மரவள்ளிக் கிழங்கு புட்டு, குழாய் புட்டு மற்றும் அரிசி மாவு புட்டு எப்படி செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.
மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- மரவள்ளிக் கிழங்கு – 1 கிலோ
- தேங்காய் துருவல் – 1 1/2 கப்
- உப்பு – தேவையான அளவு
கிழங்கு புட்டு செய்முறை:
முதலில் மரவள்ளிக் கிழங்கு தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பின்பு அவற்றை துருவிக் கொள்ளவும், பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.பின்பு அவற்றில் இருக்கும் பாலை பிழிந்து வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் அவற்றை வைத்துக்கொள்ளவும்.பின்பு புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடேற்றி கொள்ளவும்.
பின்பு புட்டு குழலை எடுத்துக்கொண்டு, அதனுள் சிறிய ஓட்டை உள்ள தட்டை வைத்து, முதலில் தேங்காய் துருவலை சிறிதளவு போட்டு கொள்ளவும், பின்பு மரவள்ளிக் கிழங்கு துருவலை போடவும், இவ்வாறு தொடர்ந்து தேங்காய் துருவல், மரவள்ளிக் கிழங்கு துருவல் என்று குழலை நிரப்பவும்.
குழல் நிரம்பியதும் இந்த குழலை புட்டு பாத்திரத்தில் இணைத்து, வேக வைத்து இறக்கினால் சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு தயார்.
வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல் |
குழாய் புட்டு செய்வது எப்படி (Puttu recipe in tamil)
வித்தியாசமான முறையில் குழாய் புட்டு (puttu seivathu eppadi) எப்படி செய்வது என்று இப்போது படித்தறிவோம் வாங்க..!
குழாய் புட்டு செய்முறை – தேவையான பொருட்கள்:
- புட்டு மாவு(அரிசி மாவு) – 1 கப்,
- தேங்காய் – 1/2 மூடி,
- உப்பு – சிறிது,
- ஏலக்காய் – 2,
- தண்ணீர் – சிறிது,
- சீனி – தேவைக்கேற்ப
குழாய் புட்டு செய்முறை
குழாய் புட்டு செய்ய முதலில் ஒரு பவுலில் மாவு, உப்பு, இடிச்ச ஏலக்காய், சேர்த்து தண்ணீர் தெளித்து உதிரியாக பிசையவும்.
தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகி விடக் கூடாது. மாவு மாவாகவே இருக்க வேண்டும். ஆனால் மாவில் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும். மாவு உதிரியாக இருக்கும். 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
பின்பு தேங்காயினை துருவி வைக்கவும்.
புட்டு மேக்கரில் முதலில் சிறிது தேங்காய் பூ போடவும் அதன் மேல் மாவை போடவும் அதன் மேல் தேங்காய் பூ என்று மாற்றி மாற்றி போடவும்.
குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி வெயிட் போடாமல் அடுப்பில் வைக்கவும். புட்டு மேக்கரை வெய்ட் போடும் இடத்தில் வைக்கவும். 5 நிமிடத்தில் புட்டு ரெடி ஆகிவிடும். புட்டு மேக்கர் மூடியில் இருந்து நன்றாக ஆவி வந்தவுடன் அடுப்பை அனைத்து புட்டை மெதுவாக எடுக்கவும். 2 அல்லது 3 அடுக்காக புட்டை வைத்து எடுக்கவும்
அழகான நீளமான குழாய் புட்டு தயார். இதனுடன் வாழைப்பழம், சீனி சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.. கேரளா ஸ்பெஷல் குழாய் புட்டு ரெடி
ஈஸியா பப்ஸ் செய்யலாம் வாங்க !!! |
அரிசி புட்டு செய்முறை (Puttu recipe in tamil)
இந்த அரிசி புட்டு (puttu seivathu eppadi) எப்படி செய்வது என்று இப்போது படித்தறிவோம் வாங்க..!
அரிசி புட்டு செய்முறை – தேவையான பொருட்கள் :
- புட்டரிசி (கடைகளில் கிடைக்கும் ) (அ ) பச்சை அரிசி (அ ) இட்லி அரிசி – தேவைக்கேற்ப
- உப்பு – தேவை கேற்ப.
- தேங்காய் துருவல் – தேவைக்கேற்ப
- ஏலக்காய் – சிறிது அளவு.
அரிசி புட்டு செய்முறை Puttu Recipe in Tamil :
அரிசி புட்டு செய்முறை முதலில் இட்லி அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி ஊற வைக்கவும் 2 மணி நேரம்.
பின்னர் துணி விரித்து நிழலில் அரிசியை காய வைக்கவும்.
கொஞ்சம் ஈர பதத்தில் மிக்ஸில் போட்டு நர நர வென அரிசியை அரைக்கவும்.
அரைத்த அரிசி மாவில் லேசாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பின்பு புட்டு குழலில் சிறிது தேங்காயை போட்டு பின்னர் அதோடு அரைத்த மாவை சேர்த்து கொள்ளவும் , ஏலக்காய் சேர்த்து கொள்ளவும். இதுபோல் இருமுறை சேர்க்கவும்.
பின்பு வேகவைக்கவும் அரிசி மாவு புட்டு வெந்தவுடன் வெளியே எடுத்து அழுத்தவும் அழகான நீல வடிவ புட்டு ரெடி.
வாழைப்பழ கேக் செய்யலாம் !!! How to Make Banana Cake Tamil |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |