அதிரசம் செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே..! இந்த தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்ய போகிறீர்கள் நண்பர்களே..! நீங்கள் எத்தனை பலகாரம் செய்தாலும் அதில் அதிரசம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்த அதிரசத்தை செய்வது சுலபமானது அல்ல அது செய்வபவர்களுக்கு தான் தெரியும். இது என்ன அதிரசமா என்று சாப்பிடுபவர்கள் ஈசியா சொல்லிவிடுவார்கள். அந்த அதிரசத்தை செய்து பார்த்தால் தெரியும் அதில் இருக்கும் கஷ்டம். அதிரசத்தை இந்த பதிவில் சொல்லியது போல் செய்து பாருங்கள். சாப்பிடுபவர்கள் அனைவரும் அதிரசம் வேற லெவல் என்று சொல்வார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் பதிவினுள் செல்லுவோம்.
இதையும் படியுங்கள் ⇒ தீபாவளி ஸ்வீட் செய்வது எப்படி?
அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி- 400 கிராம்
- வெள்ளம் – 300 கிராம்
- ஏலக்காய் –4
- நெய்- சிறிதளவு
- எண்ணெய்- பொரிப்பதற்கு தேவையான அளவு
அதிரசம் செய்வது எப்படி செய்யும் முறை:
ஸ்டேப்:1
முதலில் பச்சரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஊறிய பச்சரிசியை 20 நிமிடம் காய வையுங்கள். முக்கியமானது மாவை வெயிலில் காய வைக்க கூடாது. நிழலில் காய வையுங்கள். கையில் தண்ணீர் ஒட்டாத பதம் வர வரைக்கும் காய்ந்தால் போதுமானது.
ஸ்டேப்:2
பின் காய வைத்த பச்சரிசியை மிக்சி ஜாரில் சேருங்கள். அதனுடன் ஏலக்காய் 4 சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்:3
பின் அரைத்தும் சல்லடையில் வைத்து சலித்து மாவாக எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்:4
பின் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளுங்கள். 300 கிராம் சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். சர்க்கரை பாகு பதத்திற்கு வந்ததும் அதில் 1 தேக்கரண்டி நெய் பின் 1/4 தேக்கரண்டி சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும். அடுப்பை அணைத்து விடவும்.
ஸ்டேப்:5
அதனுடன் அரைத்து வைத்த அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும். ரொம்ப கெட்டியாகவும் இருக்க கூடாது. ரொம்ப தண்ணீராகவும் இருக்க கூடாது. அந்த மாவை எடுத்து ஊற்றினால் இலகிய பதமாக இருக்க வேண்டும்.
ஸ்டேப்:6
இதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும். அதன் மேலே சிறிதளவு நெய் தடவவும். இந்த மாவு ஆறியதும் மூடி இரண்டு நாள் வரைக்கும் அப்படியே இருக்கட்டும்.
ஸ்டேப்:7
இரண்டு நாட்கள் கழித்தும் மாவை எடுத்து பாருங்கள். கெட்டியான பதத்தில் இருக்கும். பின் இந்த மாவை ஒரு உருண்டை எடுத்து உருட்டி ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை பயன்படுத்தி தட்டி கொள்ளுங்கள். வட்ட வடிவில் தட்டி கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதன் நடுவில் ஒரு ஒட்டை போட்டு கொள்ளலாம்.
ஸ்டேப்:8
பின் அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்த அதிரசத்தை பொரித்து எடுங்கள். அவ்வளவு தாங்க பிரியமாலும், மிருதுவாகவும் அதிரசம் ரெடி.! சுவைத்து பாருங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |