வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆந்தரா ஸ்டைல் காளான் கிரேவி இப்படி செய்தால் பாத்திரம் காலியாகிடும்

Updated On: July 28, 2025 1:54 PM
Follow Us:
andhra style mushroom curry in tamil
---Advertisement---
Advertisement

Andhra Style Mushroom Curry

காளான் என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இதனை அனைவருமே விரும்பி சாப்பிடுவோம். இதில் பெரும்பாலும் செய்ய கூடிய உணவாக இருப்பது, பிரியாணி, கிரேவி, வறுவல், 65 போன்றவை தான் செய்யப்படுகிறது. இப்படி செய்ய கூடிய உணவுகளை ஒவொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். ஒரே மாதிரி செஞ்சு கொடுத்த சலித்து விடும். அதனால் வெவ்வேறு ஊர் ஸ்டைலிலும் ட்ரை செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆந்திரா ஸ்டைல் காளான் கிரேவி எப்படி செய்யலாம் என்று அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  1. காளான்-200 கிராம்
  2. கடுகு- 1/2 தேக்கரண்டி
  3. பூண்டு பல் -7
  4. வெங்காயம்-1
  5. கருவேப்பிலை-சிறிதளவு
  6. மிளகு- 1/4 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை- சிறிதளவு
  8. உப்பு- தேவையான அளவு
  9. எண்ணெய்- 5 தேக்கரண்டி
  10. தேங்காய் துருவல்- 1/4 கப்
  11. காய்ந்த மிளகாய்-2
  12. பிரியாணி இலை- 1
  13. இலவங்கப்பட்டை- 1
  14. ஏலக்காய்-1
  15. சீரகம்-2

செய்முறை:

முதலில் காளானை கழுவி விட்டு துணியால் துடைத்து காய விட வேண்டும்.

அடுத்து ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் துருவல்- 1/4 கப்  காய்ந்த மிளகாய்-2 பிரியாணி இலை- 1, இலவங்கப்பட்டை- 1,ஏலக்காய்-1, சீரகம்-2, கொத்தமல்லி 1தேக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வருது கொள்ள வேண்டும். இவை ஆறிய பிறகு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிவந்த நிறம் வரும்வரைக்கும் வதக்க வேண்டும். இதனுடன் பொடியாக அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து இதனுடன் நறுக்கிய காளான் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் மிளகுத்தூள், காரத்திற்கு தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். ஒரு 10 முதல் 15 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை நீங்கிய பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விட வேண்டும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now